அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இஎஸ்டிஐசி மாநாடு, அக்டோபர் 27 முதல் 29 வரை தில்லியில் நடைபெறவுள்ளது: பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
10 SEP 2026 5:02PM by PIB Chennai
இஎஸ்டிஐசி-2026 எனப்படும் வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க மாநாடு, வரும் அக்டோபர் 27 முதல் 29 வரை புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெறவுள்ளநாகவும் இதை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்க இருப்பதாகவும் மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
இஎஸ்டிஐசி 2026 தொடர்பான அறிமுக விழாவில் இன்று (10.09.2026) உரையாற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், இந்த மாநாட்டில் நோபல் பரிசு பெற்றவர்களான பேராசிரியர் ஜோக்கிம் ஃபிராங்க், சர் ரிச்சர்ட் ஜே. ராபர்ட்ஸ், பேராசிரியர் கோஸ்ட்யா நோவோசெலோவ் ஆகியோருடன் பல சர்வதேச விருது பெற்றவர்கள் கலந்துகொள்வார்கள் என்று தெரிவித்தார்.
அறிவியலும் தொழில்நுட்பமும் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் வளர்ந்து வருவதால், அறிவியல் திறன்களுடன் சேர்த்து, மேலாண்மை, தகவல் தொடர்பு, பிற துறைகளின் நிபுணத்துவத்தையும் அதிகளவில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். ஒருங்கிணைந்த சூழலமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன், ஆராய்ச்சியாளர்கள், புதுமைக் கண்டுபிடிப்பாளர்கள், புத்தொழில் நிறுவனங்கள், தொழில்முனைவோர், தொழில்துறையினர், கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோரிடையே நெருங்கிய கலந்துரையாடலுக்கு இந்த மாநாடு ஒரு வாய்ப்பை வழங்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308750®=3&lang=1
***
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2310807)
வருகையாளர் எண்ணிக்கை : 33