பிரதமர் அலுவலகம்
சரத்சந்திர சட்டோபாத்யாயின் 150-வது பிறந்த தினத்தையொட்டி பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
15 SEP 2026 4:38PM by PIB Chennai
பிரபல வங்காள மொழி எழுத்தாளர் சரத்சந்திர சட்டோபாத்யாயின் 150-வது பிறந்த தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். சிறந்த எழுத்தாளரை நினைவுகூர்ந்துள்ள திரு மோடி, அனைத்து இந்திய மொழிகளிலும், பல்வேறு வெளிநாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள அவரது இலக்கியப் படைப்புகளின் காலத்தால் அழியாத முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியுள்ளார். 19-வது நூற்றாண்டின் இந்தியாவையும் குறிப்பாக வங்காளத்தின் கிராமப்புற சமூகத்தையும் சரத்சந்திர சட்டோபாத்யாயின் எழுத்துக்கள் துல்லியமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் சித்தரிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
பிரபல வங்காள மொழி எழுத்தாளரும், பன்முகத்தன்மை கொண்டவருமான சரத்சந்திர சட்டோபாத்யாயின் 150-வது பிறந்த தினத்தில் மரியாதை செலுத்துகிறேன்.
அனைத்து இந்திய மொழிகளிலும், பல்வேறு வெளிநாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள அவரது படைப்புகள், 19-வது நூற்றாண்டின் இந்தியாவையும் குறிப்பாக வங்காளத்தின் கிராமப்புற சமூகத்தையும் துல்லியமாக சித்தரிப்பதற்காக நினைவு கூறப்படுகின்றன. சமூக சீர்திருத்தம், மகளிர் உரிமைகள், தேசியவாதம் ஆகியவற்றின் மீதான அவரது அர்ப்பணிப்பும் குறிப்பிடத்தக்கதாகும்.
எதிர்காலத்தில் அதிக இளைஞர்கள் அவரது எழுத்துக்களை படிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2310466®=3&lang=1
***
TV/IR/PS/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2310665)
வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam