சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
உலக சுழற்சிப் பொருளாதாரக் கூட்டம் காந்தி நகரில் தொடங்கியது
இடுகை இடப்பட்ட நாள்:
15 SEP 2026 12:20PM by PIB Chennai
உலக சுழற்சிப் பொருளாதாரக் கூட்டம் 2026-யை மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேலுடன் இணைந்து காந்தி நகரில் இன்று தொடங்கிவைத்தார். இக்கூட்டம், சுழற்சிப் பொருளாதாரம்: மக்கள் மற்றும் வளமைக்கான மாற்றம் என்ற தலைப்பின் கீழ், செப்டம்பர் 15 முதல் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல், தெற்காசியாவில் முதல் முறையாக உலக சுழற்சிப் பொருளாதாரக் கூட்டம் நடத்தப்படுவது பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையின் கீழ், இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய தலைமைத்துவத்தைப் பிரதிபலிக்கிறது. என்று கூறினார். இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையான மிஷன் லைஃப், உலகளாவிய சுழற்சிப் பொருளாதாரத்திற்கான அடித்தளமாக உருவெடுத்து வருகிறது என்று தெரிவித்தார். இக்கூட்டம் உலக நாடுகளுக்கு நடைமுறைக்கேற்ற வகையில் சுழற்சிப் பொருளாதார நடைமுறைகளை வெளிப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் முக்கிய உரையாற்றிய திரு பூபேந்தர் யாதவ், மறு பயன்பாடு, பழுதுபார்த்தல், வளங்களை மதித்தல் ஆகிய கொள்கைகள் இந்திய சமூக, கலாச்சார கட்டமைப்பில் ஆழமாக வேரூன்றி உள்ளது என்று கூறினார். கடந்த காலத்தில் இந்தியர்களின் அன்றாட வாழ்வில் மாற்றுவதற்கு முன்பு பழுதுபார்த்தல், நீக்குவதற்கு முன்பு மீண்டும் பயன்படுத்துதல், வீண் செய்வதற்கு முன்பு மீட்டெடுத்தல் என்றளவில் வெறும் பொது அறிவாக மட்டுமே இருந்ததாகவும், இதுவே நாம் தற்போது கொள்கை ரீதியாக சுழற்சிப் பொருளாதாரம் என்று விவரிக்கிறோம் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2310349®=3&lang=1
***
TV/IR/PS/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2310593)
வருகையாளர் எண்ணிக்கை : 5