எரிசக்தி அமைச்சகம்
ஹூஸ்டனில் இந்தி தின கொண்டாட்டம் - மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் பங்கேற்பு
இடுகை இடப்பட்ட நாள்:
14 SEP 2026 1:07PM by PIB Chennai
ஜி20 எரிசக்தி வளம் சார்ந்த அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவின் ஹூஸ்டன் சென்றுள்ள மத்திய மின்சாரம், வீட்டுவசதித் துறை அமைச்சர் திரு மனோகர் லால், அங்குள்ள இந்தியர்களுடன் நேற்று (செப்டம்பர் 13, 2026) தொடர்ச்சியான சந்திப்புகளை மேற்கொண்டார்.
திரு மனோகர் லால், ஹூஸ்டனில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம், சர்வதேச இந்தி சங்கத்தின் ஹூஸ்டன் கிளை ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்தி தின விழாவிலும் கலந்துகொண்டார். இது, இந்தியின் செழுமை, அனைவரையும் உள்ளடக்கும் தன்மை ஆகியவற்றைக் கொண்டாடுவதாக அமைந்தது. இது ஹூஸ்டன் பகுதி முழுவதிலுமிருந்து இந்தி ஆர்வலர்களை ஒன்றிணைத்தது. திரு மனோகர் லால் இந்நிகழ்ச்சியில் உரையாற்றியதோடு, அமெரிக்காவில் இந்தியை மேம்படுத்துவதற்கும், இந்தியாவுக்கும் இந்திய சமூகத்திற்கும் இடையிலான கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளைப் பாராட்டினார்.
அங்கு இந்தியத் துணைத் தூதரகத்தில் அன்னையின் பெயரில் மரக்கன்று நடும் இயக்கத்தின் கீழ் மரக்கன்று ஒன்றையும் திரு மனோகர் லால் நட்டார்.
மேலும் விவரங்களுக்கு ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் :
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2309999®=3&lang=1
(Release ID: 2309999)
****
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2310047)
வருகையாளர் எண்ணிக்கை : 5