பிரதமர் அலுவலகம்
ஆசியக் கோப்பையைத் தக்கவைத்துக்கொண்ட இந்திய ஜூனியர் மகளிர் ஹாக்கி அணிக்கு பிரதமர் வாழ்த்து.
இடுகை இடப்பட்ட நாள்:
13 SEP 2026 8:38PM by PIB Chennai
சிறப்பான ஆட்டத்தின் மூலம் ஆசியக் கோப்பையைத் தக்கவைத்துக்கொண்ட இந்திய ஜூனியர் மகளிர் ஹாக்கி அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அணியின் இந்த வெற்றி, வீராங்கனைகளின் திறமையையும், மனவுறுதியையும் பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:
“இந்திய ஹாக்கிக்கு ஒரு பெருமைக்குரிய தருணம்!
சிறப்பான ஆட்டத்தின் மூலம் ஆசியக் கோப்பையைத் தக்கவைத்துக்கொண்ட நமது ஜூனியர் மகளிர் ஹாக்கி அணிக்கு வாழ்த்துகள்.
அவர்களது வெற்றி, வீராங்கனைகளின் திறமையையும், மனவுறுதியையும் பறைசாற்றுகிறது.
ஒட்டுமொத்த அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்!
@TheHockeyIndia”
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2309879®=3&lang=1
***
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2310040)
வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam