பிரதமர் அலுவலகம்
ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப்-ன் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
12 SEP 2026 11:59PM by PIB Chennai
ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப்-ன் பர்காஷ் பூரப் எனும் புனிதமான நன்னாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
பல நூற்றாண்டுகளாக, ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப், மனிதகுலத்திற்குத் தன்னலமற்ற சேவை, மனிதத்துவத்தின் கண்ணியத்திற்கும், ஒற்றுமைக்கும் வழிகாட்டியாக விளங்கினார் என்று பிரதமர் கூறினார்.
சமூகத்தில் இத்தகைய மாண்புகளை ஆழப்படுத்தவும், கருணை, நல்லிணக்கம் கொண்ட உலகை உருவாக்கவும் இந்தப்புனிதமான நிகழ்வு அனைவரையும் ஊக்குவிக்கும் என்று திரு மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:
“ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப்-ன் பர்காஷ் பூரப் எனும் புனிதமான நன்னாளை முன்னிட்டு நல்வாழ்த்துகள்.
பல நூற்றாண்டுகளாக, இது மனிதகுலத்திற்குத் தன்னலமற்ற சேவை, கண்ணியம், ஒற்றுமைக்கான வழியைக் காட்டி வந்துள்ளது.
இந்த உன்னதமான நன்னாள், நம் சமூகத்தில் இத்தகைய மாண்புகளை ஆழப்படுத்தவும், கருணை, நல்லிணக்கம் நிறைந்த ஒரு உலகத்தை உருவாக்கவும் நம்மை ஊக்குவிக்கட்டும்.”
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2309627®=3&lang=1
***
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2310029)
வருகையாளர் எண்ணிக்கை : 7