பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 14 SEP 2026 8:45AM by PIB Chennai

ஆசிய கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

போட்டித்தொடர் முழுவதும் அணியின் தன்னம்பிக்கை, சீரான ஆட்டம், அபாரமான மன உறுதி ஆகியவை முழுமையாக வெளிப்பட்டதாக பிரதமர் கூறியுள்ளார்.

இந்த வெற்றியானது, நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இளைஞர்களை மேலும் விளையாடி ஜொலிக்கத் தூண்டும் என திரு நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"இந்திய கிரிக்கெட்டுக்கு இது ஒரு பெருமைக்குரிய தருணம்!

ஆசியக் கோப்பையை வென்ற மகளிர் அணிக்கு வாழ்த்துகள். போட்டித்தொடர் முழுவதும் அவர்களின் தன்னம்பிக்கை, சீரான ஆட்டம், அபாரமான மன உறுதி ஆகியவை முழுமையாக வெளிப்பட்டன.

இந்த வெற்றி, நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இளைஞர்களை மேலும் விளையாடி ஜொலிக்கத் தூண்டட்டும்."

(Release ID: 2309934)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2309996) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Bengali , Gujarati , Malayalam