உள்துறை அமைச்சகம்
மும்பையில் கணேஷ் ஞானார்த்தி கண்காட்சி - மத்திய அமைச்சர் திரு அமித் ஷா தொடங்கி வைத்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
13 SEP 2026 5:44PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, மும்பையில் ஆசியாட்டிக் சொசைட்டி ஏற்பாடு செய்துள்ள 'கணேஷ் ஞானார்த்தி' எனப்படும் விநாயகப் பெருமான் தொடர்பான கண்காட்சியை' இன்று (13.09.2026) தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மகாராஷ்டிர முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே, ஆசியாட்டிக் சொசைட்டி ஆஃப் மும்பையின் தலைவர் டாக்டர் வினய் சகஸ்ரபுத்தே உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு அமித் ஷா, தாம் ஆசியாட்டிக் சொசைட்டிக்கு உள்துறை அமைச்சராக வரவில்லை என்றும், மாறாக, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடரும் இந்திய அறிவுப் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் இயக்கத்தில் ஒரு பங்கேற்பாளராகவே வந்துள்ளதாகவும் கூறினார். மும்பை ஆசியாட்டிக் சொசைட்டி, இந்திய அறிவுப் பாரம்பரியத்தின் தூதுவராகத் திகழ்ந்து, அதனை நாடு முழுவதும் பரப்பும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தச் சங்கத்திற்கு வலுவூட்டுமாறு மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸிடம் தாம் கூறியுள்ளதாக திரு அமித் ஷா தெரிவித்தார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில், மத்திய அரசு மும்பை ஆசிய சங்கத்திற்கு சாத்தியமான அனைத்து ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கி வருவதாகவும், எதிர்காலத்திலும் அது தொடரும் என்றும் அவர் கூறினார். நாட்டின் ஒவ்வொரு கிராமம், ஒவ்வொரு நகரம், ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள இதுபோன்ற கொள்கையுடைய அனைத்து நிறுவனங்களும் மும்பை ஆசிய சங்கத்துடன் இணைக்கப்பட்டு, ஒரு பகிரப்பட்ட அறிவுக் களஞ்சியம் உருவாக்கப்பட வேண்டும் என்றும், அதன் மூலம் அந்த அறிவு நாடு முழுவதிலுமுள்ள மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், அறிஞர்களுக்குக் கிடைக்கப்பெறும் என்றும் திரு அமித் ஷா கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இது ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2309780®=3&lang=1
***
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2309877)
வருகையாளர் எண்ணிக்கை : 11