தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
கட்டடம் மற்றும் இதர கட்டுமானத் தொழிலாளர்கள் குறித்த தேசிய மாநாடு நிறைவடைந்தது
இடுகை இடப்பட்ட நாள்:
12 SEP 2026 3:59PM by PIB Chennai
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், மகாராஷ்டிர அரசுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கட்டிடம் மற்றும் இதர கட்டுமானத் தொழிலாளர்கள் குறித்த இரண்டு நாள் தேசிய மாநாடு மும்பையில் நிறைவடைந்தது. செப்டம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்த மாநாட்டில், கட்டுமானத் தொழிலாளர்களின் நலன், திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு, சமூகப் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள் குறித்து விவாதிக்க மத்திய அரசு, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியங்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்தனர்.
இரண்டாம் நாளன்று தொடக்க உரை நிகழ்த்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சக செயலாளர் டாக்டர் சந்திர பூஷன் குமார், தொழிலாளர் நல வாரியத் துறையில் உள்ள தற்போதைய சவால்கள், வாய்ப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். திறன்சார் சூழலியலை வலுப்படுத்துவதும், கொள்கை மற்றும் திட்ட வடிவமைப்பின் மையத்தில் தொழிலாளர்களின் கண்ணியத்தை முன்வைப்பதும், பதிலளிக்கக்கூடிய, அனைவரையும் உள்ளடக்கிய, மீள்திறன் கொண்ட தொழிலாளர் சூழலியலை உருவாக்குவதற்கு இன்றியமையாதது என்று அவர் வலியுறுத்தினார். தொழிலாளர் சந்தையில் நிலவும் தகவல் மற்றும் அணுகல் ரீதியான ஏற்றத்தாழ்வுகளைக் களைவதன் அவசியத்தையும், வேலை தேடுபவர்களுக்கும் பணியமர்த்துபவர்களுக்கும் இடையே சிறந்த இணைப்புகளை எளிதாக்கும் வழிமுறைகளை வலுப்படுத்துவதன் தேவையையும் அவர் எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2309467®=3&lang=1
***
TV/RB/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2309677)
வருகையாளர் எண்ணிக்கை : 6