சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ஆந்திரப் பிரதேசத்தில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்களை மத்திய அமைச்சர் திரு ஜெ.பி. நட்டா திறந்து வைத்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
12 SEP 2026 2:52PM by PIB Chennai
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு. ஜகத் பிரகாஷ் நட்டா இன்று (12.09.2026) ஆந்திரப் பிரதேசத்தில் 10 தீவிர சிகிச்சைப் பிரிவுகளையும், 12 ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்களையும் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு என். சந்திரபாபு நாயுடு, ஆந்திர அரசின் சுகாதார அமைச்சர் திரு சத்ய குமார் யாதவ், மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு நட்டா, இந்தத் திறப்பு விழா, தேசத்திற்கு ஒரு வலுவான சுகாதாரப் பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஒரு முக்கியப் படியாகும் என்று கூறினார். சுகாதாரப் பாதுகாப்பே தேசியப் பாதுகாப்பு என்பதை கொவிட்-19 நமக்குக் கற்றுக்கொடுத்தது என்று திரு நட்டா தெரிவித்தார்.
நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பு கணிசமாக விரிவடைந்துள்ளதாகவும், 12 ஆண்டுகளில் 16 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் நிறுவப்பட்டதன் மூலம், நாட்டில் உள்ள மொத்த எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளதாகவும் திரு நட்டா கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2309440®=3&lang=1
(Release ID: 2309440)
****
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2309555)
வருகையாளர் எண்ணிக்கை : 14