குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ஈரான் அதிபர் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 12 SEP 2026 4:35PM by PIB Chennai

ஈரான் அதிபர் திரு மசூத் பெஷெஷ்கியான், குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு-வை இன்று (செப்டம்பர் 12, 2026) குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்துப் பேசினார்.

 

இந்தியாவிற்கு தமது முதல் பயணத்தை மேற்கொண்டுள்ள ஈரான் அதிபர் திரு பெஷெஷ்கியானை வரவேற்ற குடியரசுத் தலைவர், இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவத்திற்கு ஈரான் வழங்கிய ஆதரவிற்குப் பாராட்டு தெரிவித்தார்.

 

ஈரான் - இந்தியா இடையேயான நீண்டகால நட்புறவுப் பிணைப்புகள், நமது வலுவான கலாச்சார உறவுகள் உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். பிராந்தியத்தில் நீடித்த அமைதியை நிலைநாட்டுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை குடியரசுத் தலைவர் மீண்டும் வலியுறுத்தியதோடு, மோதல்களுக்கிப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று கூறினார்.

 

(Release ID: 2309472)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2309541) வருகையாளர் எண்ணிக்கை : 17
இந்த வெளியீட்டை படிக்க: हिन्दी , English , Urdu , Marathi , Bengali , Gujarati , Telugu , Malayalam