பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ரோஷ் ஹஷானா பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நேதன்யாகுவுக்கும் உலகெங்கிலும் உள்ள யூதர்களுக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 12 SEP 2026 2:31PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, ரோஷ் ஹஷானா எனப்படும் யூதப் புத்தாண்டுப் பண்டிகையை முன்னிட்டு இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நேதன்யாகு, இஸ்ரேல் மக்கள், உலகெங்கிலும் உள்ள யூதர்கள் ஆகியோருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

 

இந்தப் புத்தாண்டு அனைவருக்கும் அமைதி, நம்பிக்கை, நல்ல ஆரோக்கியம், தொடர்ச்சியான முன்னேற்றம் ஆகியவற்றால் நிறைந்திருக்க வேண்டும் என்று பிரதமர் வாழ்த்தியுள்ளார்.

 

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

 

“ஷானா டோவா!

 

இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, இஸ்ரேல் மக்கள், உலகெங்கிலும் உள்ள யூத சமூகங்கள் ஆகியோருக்கு மிகவும் மகிழ்ச்சியான ரோஷ் ஹஷானா வாழ்த்துகள்.

 

இந்தப் புத்தாண்டு அனைவருக்கும் அமைதி, நம்பிக்கை, நல்ல ஆரோக்கியம், தொடர்ச்சியான முன்னேற்றம் ஆகியவற்றால் நிறைந்திருக்கட்டும்.”

 

(Release ID: 2309433)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2309460) வருகையாளர் எண்ணிக்கை : 14