கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
தேசிய கடல்சார் பாரம்பரிய வளாக சங்கத்தின் 2-வது ஆளுகைக் குழுக் கூட்டம் - மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் தலைமை வகித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
11 SEP 2026 8:08PM by PIB Chennai
ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான இந்தியாவின் கடல்சார் பாரம்பரியத்தை மீட்டெடுத்துக் காட்சிப்படுத்தும் நோக்கில், குஜராத்தின் லோத்தலில் அமையவிருக்கும் கடல்சார் அருங்காட்சியக கட்டுமான பணிகளின் முன்னேற்றத்தை, மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் ஆய்வு செய்தார். அத்துடன், தேசிய கடல்சார் பாரம்பரிய வளாக சங்கத்தின் 2வது ஆளுகைக் குழுக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார்.
மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட மிக முக்கியமான கலாச்சார, கடல்சார் முயற்சிகளில் ஒன்று என தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தை குறிப்பிட்ட திரு சர்பானந்த சோனோவால், இத்திட்டம் லோத்தலை உலகப் புகழ்பெற்ற கடல்சார் பாரம்பரிய சுற்றுலா மையமாக நிறுவும் என்றார்.
தேசிய கடல்சார் பாரம்பரிய வளாக சங்கமானது, முக்கிய சட்டப்பூர்வப் பதிவுகளை நிறைவுசெய்து, எதிர்கால வளத் திரட்டலுக்கான தனது நிறுவனக் கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார். போர்ச்சுகல், ஐக்கிய அரபு அமீரகம், வியட்நாம், தாய்லாந்து, நெதர்லாந்து, டென்மார்க், ஓமன், இஸ்ரேல், ஜெர்மனி, கொரியக் குடியரசு, இத்தாலி, நியூசிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட 13 நாடுகள் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ள நிலையில், இத்திட்டத்திற்கு கிடைத்துள்ள சர்வதேச வரவேற்பு ஊக்கமளிப்பதாக உள்ளது என்று அவர் தெரிவித்தார். மேலும், 35-க்கும் மேற்பட்ட ஒத்துழைப்புகளை உருவாக்கும் நோக்கில், இன்னும் பல நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என்று அவர் தெரிவித்தார். இந்தக் ஒத்துழைப்புகள், கப்பல் மாதிரிகளைப் பரிமாறிக்கொள்ளவும், ஆராய்ச்சி ஒத்துழைப்புக்கும் வழிவகுக்கும் என்று திரு சர்பானந்த சோனோவால் கூறினார்.
இதன் முதல்கட்ட கட்டுமானத்தில் சுமார் 82 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், இலக்கை அடைவதற்காக, கடுமையான பணிகளை தொடர வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2309295®=3&lang=1
(Release ID : 2309295)
***
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2309451)
வருகையாளர் எண்ணிக்கை : 8