பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தீவிரவாத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் உறுதியான நிலைப்பாட்டை பிரதமர் வலியுறுத்தியுள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 11 SEP 2026 11:48AM by PIB Chennai

அமெரிக்காவில் 2001 செப்டம்பர் 11 அன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் 25-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்தப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு மரியாதைச் செலுத்தினார். இந்த தீவிரவாத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தனது ஆறுதலை அவர் வெளிப்படுத்தினார்.

உலக அளவில் பயங்கரவாத செயல்கள் காரணமாக எண்ணற்ற உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியப் பிரதமர், எல்லைத் தாண்டியப் பயங்கரவாத செயல்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடான இந்தியா பல தசாப்தங்களாக தீவிரவாத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் எவ்வித சமரசமும் இன்றி செயல்பட்டு வருவதாக கூறினார்.

பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தொடர்ந்து உருமாறி வந்தபோதிலும் அதன் அனைத்து வடிவங்கள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிரான இந்தியாவின் உறுதியான நடவடிக்கைகள் எவ்வித சமரசமுமின்றி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். தீவிரவாத செயல்களுக்கு எதிரான அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவளிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த பயங்கரவாத செயலை நினைவுகூறும் வகையில் அமைக்கப்பட்ட நினைவுச்சின்னம் மற்றும் அருங்காட்சியகத்திற்கு கடந்த 2014-ம் ஆண்டு தான்  மேற்கொண்ட பயணத்தின் சில காட்சிளையும் பிரதமர் பகிர்ந்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"அமெரிக்காவில் 2001 செப்டம்பர் 11 அன்று நடத்தப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதல்களின் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு  மரியாதை செலுத்துகிறேன். தங்களது வாழ்க்கையை நிரந்தரமாக மாற்றியமைத்த இந்த தாக்குதல் சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு உறுதுணையாக நிற்கிறோம்.

பயங்கரவாத செயல்கள் உலக அளவில் எண்ணற்ற உயிர்களை பறித்துள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாடான இந்தியா, பல தசாப்தங்களாக இதற்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தொடர்ந்து உருமாறி வந்தபோதிலும், அதன் அனைத்து வடிவங்களையும் எவ்வித சமரசமுமின்றி உறுதியுடன் இந்தியா தொடர்ந்து எதிர்த்து போராடி வருகிறது.  பயங்கரவாத செயல்களுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்தியா உறுதுணையாக நிற்கும்.

இந்த பயங்கரவாத சம்பவத்தை நினைவு கூறும் வகையில் அமைக்கப்பட்ட நினைவுச்சின்னம் மற்றும் அருங்காட்சியகத்திற்கு 2014-ம் ஆண்டில் தான் மேற்கொண்ட பயணத்தின் சில காட்சிகள்."

***

(Release ID: 2309033)

SS/SV/SM/RJ 


(வெளியீட்டு அடையாள எண்: 2309214) வருகையாளர் எண்ணிக்கை : 13