பிரதமர் அலுவலகம்
பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜெர்மனி அதிபர் தொலைபேசியில் பேச்சு
இருதரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர்
இடுகை இடப்பட்ட நாள்:
10 SEP 2026 6:27PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று (10.09.2026) ஜெர்மனி அதிபர் திரு ஃபிரெட்ரிக் மெர்ஸ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
இந்தியாவும் ஜெர்மனியும் இந்த ஆண்டு தங்களது 75 ஆண்டுகால தூதரக உறவுகளைக் கொண்டாடும் வேளையில், பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜெர்மனி அதிபர் மெர்ஸ் ஆகியோர் இந்தியா-ஜெர்மனி உத்திசார் ஒத்துழைப்பின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தனர். உயர்மட்டப் பரிமாற்றங்களில் தொடரும் உத்வேகத்தை அவர்கள் குறிப்பிட்டதோடு, வர்த்தகம், முதலீடு, மேம்பட்ட தொழில்நுட்பங்கள், தூய்மையான எரிசக்தி, பாதுகாப்பு, கல்வி உள்ளிட்ட முக்கியத் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்களது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.
தலைவர்கள் பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய, உலகளாவிய நிகழ்வுகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதோடு, உலக அமைதி, நிலைத்தன்மை, செழிப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்ற ஒப்புக்கொண்டனர்.
***
(Release ID: 2308837)
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2308918)
வருகையாளர் எண்ணிக்கை : 9