பிரதமர் அலுவலகம்
பிரதமர் திரு நரேந்திர மோடி பாரிஸில் உள்ள பிஏபிஎஸ் சுவாமி நாராயண் ஆலய திறப்பு விழாவின்போது அங்கு கூடியிருந்தவர்களிடையே உரையாற்றினார்
இடுகை இடப்பட்ட நாள்:
06 SEP 2026 11:59PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி பாரிஸில் உள்ள பிஏபிஎஸ் சுவாமி நாராயண் ஆலய திறப்பு விழாவின்போது அங்கு கூடியிருந்தவர்களிடையே காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார். பிரான்ஸ் தலைநகரில் நடைபெற்ற இந்த திறப்பு விழா குறித்து குறிப்பிட்ட பிரதமர், வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை இருதரப்பு உறவுகளுக்கான முக்கிய அடித்தளமாகக் கூறினார். இந்தப் பிரம்மாண்டமான சுவாமி நாராயண் ஆலயம் இந்தியா-பிரான்ஸ் இடையேயான கலாச்சார உறவுகளில் முக்கிய மைல்கல் என்று திரு மோடி குறிப்பிட்டார்.
மரியாதைக்குரிய துறவிகள், சனாதன மரபைச் சேர்ந்தர்கள் ஆகியோரின் ஆசிர்வாதத்தை வேண்டிய பிரதமர், இந்நிகழ்ச்சியின் சூழலை உலகளாவிய சகோதரத்துவத்தின் உண்மையான பிரதிபலிப்பாக விளக்கினார். உலக அரங்கில் பழங்கால தத்துவங்களை இந்த ஒன்றுகூடல் பிரதிபலிக்கிறது என்று கூறினார். தற்போது இந்த மேடை, உலகமே ஒரு குடும்பம் என்ற உணர்வின், விழிப்புணர்வுமிக்கத் தளமாக மாறியுள்ளது என்று திரு மோடி தெரிவித்தார்.
தெய்வீகமான கருணைக்கும், ஆன்மீகத் தலைவர்கள் அன்பிற்கும் பெருகும் நன்றி கூறிய பிரதமர், இது போன்ற புனிதமான அம்சங்களுடன் தான் தொடர்ந்து பெறும் பாக்கியத்தை நினைவுகூர்ந்தார். இத்தகைய புனிதமிக்க நிகழ்ச்சிகளுடன் இணையும் வாய்ப்பு தமக்கு தொடர்ந்து கிடைத்து வருவதாகத் திரு மோடி தெரிவித்தார்.
நேரில் பங்கேற்காவிட்டாலும் இந்த கொண்டாட்டங்களுடன் தனக்குள்ள ஆழ்ந்த உணர்வுப்பூர்வமிக்க இணைப்பை வெளிப்படுத்தினார். மனதாலும், ஆன்மாவாலும் மக்களிடையே இருப்பதாக உணர்கிறேன் என்று பிரதமர் கூறினார்.
பரம பூஜ்ய பிரமுக் சுவாமி மகராஜுக்கு மரியாதை செலுத்திய பிரதமர், இந்தியாவின் பழங்கால கலாச்சார, ஆன்மீக பெருமையை மீட்பதற்கு தொடங்கப்பட்ட தொலைநோக்கு பார்வைக்கொண்ட இயக்கத்தை நினைவுக்கூர்ந்தார். இந்த உலகளாவிய இயக்கம் எந்தளவு விரைவாக வளர்ச்சி அடைந்துள்ளது என்பது குறித்து சுட்டிக்காட்டினார். தற்போது அந்த மறுமலர்ச்சியின் ஒளி ஐரோப்பா உள்ளிட்ட உலக நாடுகள் முழுவதும் பரவி வருவதாக திரு மோடி கூறினார்.
2024-ம் ஆண்டு தொடக்கத்தில் திறக்கப்பட்ட பிரம்மாண்டமான அபுதாபி கோயில் முதல் தற்போதைய இந்த சிறப்புமிக்க படைப்பு வரையிலான பயணம் குறித்து எடுத்துரைத்த பிரதமர் ஆன்மீகத் தலைவர்களின் அயராத அர்ப்பணிப்பு, தொலைநோக்கு பார்வையுடன் கூடிய முயற்சிகள் ஆகியவற்றைப் பாராட்டினார். படைப்பு பணியின் இத்தொடர்ச்சி அந்த மகான்களின் அசைக்க முடியாத உறுதிக்கு சான்றாகும் என்று திரு மோடி கூறினார்.
பரம பூஜ்ய மகந்த் சுவாமி மகராஜுக்கு மரியாதைச் செலுத்திய பிரதமர், பிஏபிஎஸ் அமைப்பு மற்றும் அதன் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். இந்த மகத்துவமான பணிக்காக தமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் திரு மோடி கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307274®=3&lang=1
***
TV/IR/PS/SU
(வெளியீட்டு அடையாள எண்: 2308833)
வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam