விவசாயத்துறை அமைச்சகம்
வேளாண்மை, வனம் குறித்த 9-வது ஆசியான் – இந்தியா அமைச்சர்கள் நிலையிலான கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது
இடுகை இடப்பட்ட நாள்:
10 SEP 2026 12:56PM by PIB Chennai
வேளாண்மை மற்றும் வனம் குறித்த 9-வது ஆசியான் – இந்தியா அமைச்சர்கள் நிலையிலான கூட்டம் 2026 செப்டம்பர் 9 அன்று புதுதில்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பிலிப்பைன்ஸ் வேளாண் துறை அமைச்சர் திரு பிரான்சிஸ்கோ பி. டியூ லாரெல், மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் ஆகியோர் இணைந்து தலைமை வகித்தனர்.
உணவு பாதுகாப்பு, ஊட்டச்சத்து, விவசாயிகளின் வாழ்வாதாரம், நீடித்த மற்றும் குறைந்த மாசு வெளியீட்டு மேம்பாடு, புதுமைக் கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி மேம்பாடு, கிராமப்புற செழுமை வேளாண்மை, வன அமைப்புகளின் மீள்திறன் ஆகியவற்றை ஆதரிக்கும் ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்வதற்கான தனது உறுதிப்பாட்டை இக்கூட்டம் சுட்டிக்காட்டியது.
2045-ம் ஆண்டிற்கான உணவு, வேளாண்மை, வனத்துறை தொலைநோக்கு பார்வை குறித்த ஆசியான் தலைவர்களின் பிரகடனம், ஆசியான் உணவு, வேளாண்மை, வனத்துறைசார் திட்டம் 2026-2030 ஆகியவற்றையும் இக்கூட்டம் வரவேற்றது. பருவநிலை மாற்றம், தீவிர வானிலை நிகழ்வுகள், புவிசார் அரசியல், பொருளாதாரப் பதற்றங்கள், எரிசக்தி, உரங்கள், வேளாண் இடுபொருள் சந்தைகளில் நிலவும் ஏற்ற இறக்கங்கள், வர்த்தகம், சரக்குக் போக்குவரத்தில் ஏற்படும் தடங்கல்கள், தாவர, விலங்கு ஆரோக்கியம், தாவரப் பூச்சிகள், உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் உணவு, வேளாண்மை, வனத்துறை ஆகியவற்றின் மீது ஏற்படும் தாக்கங்கள் குறித்து இக்கூட்டத்தில் கருத்துகள் பகிர்ந்துகொள்ளப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308621®=3&lang=1
***
TV/IR/PS/SU
(வெளியீட்டு அடையாள எண்: 2308806)
வருகையாளர் எண்ணிக்கை : 10