நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
தேசிய நுகர்வோர் உதவி மையம், 15 மாதங்களில், ரூ. 105 கோடிக்கும் அதிகமான பணத்தை நுகர்வோர் திரும்பப் பெற உதவியுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
09 SEP 2026 5:57PM by PIB Chennai
மத்திய நுகர்வோர் விவகாரத் துறையின் கீழ் செயல்படும் தேசிய நுகர்வோர் உதவி மையம், 25 ஏப்ரல் 2025 முதல் 31 ஜூலை 2026 வரையிலான பதினைந்து மாத காலத்தில், 35 துறைகளைச் சார்ந்த நுகர்வோரின் பணத்தைத் திரும்பப் பெறுதல் தொடர்பான 1,66,189 குறைகளுக்கு தீர்வு கொண்டுள்ளதுடன், ரூ. 105 கோடிக்கும் அதிகமான தொகையைத் திரும்பப் பெற உதவியுள்ளது.
நுகர்வோர் ஆணையங்களுக்கு நேரடியாகச் செல்வதைத் தவிர்த்து, உரிய நேரத்தில் நிவாரணம் பெறும் வகையில், சட்ட நடவடிக்கைக்கு முந்தைய நிலையிலேயே பணத்தைத் திரும்பப் பெறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நாடு முழுவதும் உள்ள நுகர்வோர் தங்களது குறைகளைப் பதிவு செய்யவும், தீர்வு காண உதவிடும் ஒரு மையப்படுத்தப்பட்ட தளமாக தேசிய நுகர்வோர் உதவி மையம் உருவெடுத்துள்ளது.
பணத்தைத் திரும்பப் பெறுதல் தொடர்பான குறைபாடுகளுக்கு மின்னணு வர்த்தக துறை அதிகபட்ச பங்களிப்பைக் கொண்டிருந்தது. இத்துறையின் வாயிலாகப் பெறப்பட்ட 1,00,466 புகார்கள் மூலம்,
ரூ. 74 கோடிக்கும் அதிகமான தொகை திரும்பப் பெறப்பட்டது. அடுத்தபடியாக, பயணம், சுற்றுலாத் துறையில் ரூ. 10 கோடிக்கும் அதிகமான தொகை திரும்பப் பெறப்பட்டுள்ளது. மே 2026 முதல் ஜூலை 2026 வரையிலான காலத்தில், மின்னணு வர்த்தகத் துறையில் திரும்பப் பெறப்பட்ட தொகை ரூ. 1 முதல் ரூ. 35,83,790 வரை இருந்தது. இது நுகர்வோரின் பல்வேறு விதமான குறைகளுக்கு தீர்வு கண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2308386®=3&lang=1
***
TV/SV/SU
(வெளியீட்டு அடையாள எண்: 2308773)
வருகையாளர் எண்ணிக்கை : 5