பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியப் பெருங்கடல் பகுதியில், ஒருங்கிணைந்தப் பாதுகாப்புடன் கூடிய , கடல் வழித்தடங்களும், தடையற்ற கப்பல் போக்குவரத்தும் மிகவும் அவசியம்: பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்

இடுகை இடப்பட்ட நாள்: 09 SEP 2026 6:13PM by PIB Chennai

பாதுகாப்பான கடல் வழித்தடங்கள், தடையற்ற கப்பல் போக்குவரத்து, சர்வதேச சட்டங்களை மதித்தல், தடையற்ற கடல்சார் வர்த்தகம் ஆகியவை இந்தியப் பெருங்கடல் பகுதியின் ஒருங்கிணைந்தப் பாதுகாப்பு, வளத்திற்கு  மிகவும் அவசியமானவை என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறினார்.

அரசுமுறைப் பயணமாக இலங்கை சென்றுள்ள அவர், செப்டம்பர் 9, 2026 அன்று கொழும்பில் உள்ள அந்நாட்டு துணை பாதுகாப்பு அமைச்சர் திரு அருணா ஜெயசேகரா, இலங்கை ராணுவம், கடற்படை, விமானப்படை தளபதிகள், பிற மூத்த அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில்  உரையாற்றினார்.

சாதகமான, பாதுகாப்பான கடல்சார் சூழல் அமைப்பை உருவாக்கவும், வளர்ச்சிக்கான நலன்கள், சிறந்த எதிர்காலத்திற்கு அதிகரித்து வரும் கடல்சார் சவால்களை எதிர்கொள்ளவும், இந்தியா - இலங்கை நாடுகள் இடையே மேம்பட்ட ஒத்துழைப்பு தேவை என்று அவர் வலியுறுத்தினார்.

தேசிய பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவை புவியியல், பாதுகாப்பு சார்ந்த அம்சங்களுடன் இயல்பாகவே பிணைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், இப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து எந்தவொரு நாடும் அலட்சியமாக இருக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். திறன் மேம்பாடு முதல் கூட்டுப் பயிற்சிகள் வரை பல்வேறு நடவடிக்கைகள் மூலம், இவ்விரு நாடுகளும் தங்களது திறன்களை மேம்படுத்தியிருந்த போதிலும், கடல்சார் ஒத்துழைப்புக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து, நீண்டகாலமாகத் தொடரும் பாதுகாப்பு, உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை திரு ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2308395&reg=3&lang=1

(Release ID: 2308395)

****

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2308527) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Malayalam