பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புத்தாக்க தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் அசாமில் அதிநவீன அலுவலகம்: செப்டம்பர் 10-ம் தேதி திறப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 09 SEP 2026 2:02PM by PIB Chennai

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள எரிசக்தி துறை கூட்டு பெருநிறுவனங்கள் இயங்கும் மையத்தில், அதிநவீன வசதிகளுடன் கூடிய அறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. புதிதாகத் தொழில் தொடங்கும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில் இந்த அலுவலகம் செயல்பட உள்ளது.    

இங்கு 50-க்கும் அதிகமான பணி செய்யும் அறைகள், 16 கேபின்கள், 2 முதலீட்டாளர் ஆலோசனைக்கூட்ட அரங்கங்கள், தொழில்நுட்ப பணியாளர்களுக்கான 2 அறைகள் ஆகியவை நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. தொழில்முனைவோர், தொழிற்துறை நிபுணர்கள், முதலீட்டாளர்கள் உள்ளிட்டோர் கலந்தாலோசித்து தங்களது கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் வகையில், மிகச்சிறந்த சுற்றுப்புறச் சூழலை இந்த அலுவலகம் கொண்டுள்ளது.

புத்தாக்க தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில், தொழில்நுட்பம், நிதி, சட்டம் தொடர்பான ஆலோசனைகளைப் பெறவும் இங்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கெனத் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டு, உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

என்ஆர்எல் மையத்தின் 6-வது தளத்தில் அமைந்துள்ள இந்த அலுவலகம் 2026 செப்டம்பர் 10-ம் தேதி பயனாளிகளின் பயன்பாட்டிற்காக தொடங்கப்பட உள்ளது.       

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308205&reg=3&lang=1

***

SS/LN/SH  


(வெளியீட்டு அடையாள எண்: 2308460) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Bengali-TR , Telugu , Kannada