குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜனநாயக நடைமுறையின் உயரிய மாண்புகளைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்: குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன்
இடுகை இடப்பட்ட நாள்:
09 SEP 2026 1:46PM by PIB Chennai
சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜனநாயக நடைமுறையின் உயரிய மாண்புகளைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், நாட்டின் வளர்ச்சிக்காகப் பணியாற்ற வேண்டும் என்றும் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
அருணாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம், அம்மாநிலத் தலைநகர் இட்டாநகரில் இன்று நடைபெற்றது.
இந்த சிறப்புக் கூட்டத்தில், கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அருணாச்சல பிரதேச மாநிலத்தின் வளர்ச்சி, வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்குகளை எட்ட உதவிடும் என்று கூறினார்.
இந்தியாவின் வளமான ஜனநாயக பாரம்பரியத்தை நினைவுகூர்ந்த அவர், இந்தியா ஜனநாயகத்தின் தாயாகத் திகழ்கிறது என்றும், இந்த மரபுக்கு ஏற்ப மக்கள் பிரதிநிதிகள் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அருணாச்சல பிரதேச மாநிலம், மகத்தான உத்திசார் முக்கியத்துவம், வளமான கலாச்சார பாரம்பரியம், ஏராளமான இயற்கை வளங்களைக் கொண்டிருப்பதாகவும், நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சட்டப்பேரவை வளாகத்திற்கு வருகை தந்த குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன், மகாத்மா காந்தி, பாபாசாகேப் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308195®=3&lang=1
***
SS/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2308434)
வருகையாளர் எண்ணிக்கை : 12