குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

மணிப்பூரில் ஐ.என்.ஏ அருங்காட்சியகம் மற்றும் சைனிக் பள்ளியை குடியரசு துணைத்தலைவர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்

இடுகை இடப்பட்ட நாள்: 08 SEP 2026 4:30PM by PIB Chennai

குடியரசுத் துணைத்தலைவர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன், மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் அமைந்துள்ள இந்திய தேசிய ராணுவத்தின் (ஐ.என்.ஏ) அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டு, சுதந்திரப் போராட்ட வீரர்களின் வீரத்திற்கும் தியாகத்திற்கும் அஞ்சலி செலுத்தினார். இந்திய நிலப்பரப்பில் முதன்முறையாக மூவண்ணக் கொடி ஏற்றி வைக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தையும், போர்க் காட்சிப் கூடத்தையும் பார்வையிட்ட அவர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து, இம்பால் சைனிக் பள்ளிக்குச் சென்ற குடியரசுத் துணைத்தலைவர், அங்குள்ள போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதுடன், மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் இந்திய தேசிய ராணுவத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்பையும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் நாட்டுக்காகச் செய்த தியாகத்தையும் நினைவுகூர்ந்தார்.

ஒரு நிறுவனத்தின் உண்மையான பெருமை அதன் மாணவர்களின் நற்பண்புகளிலேயே பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்ட அவர், ஒழுக்கம், துணிவு மற்றும் தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக் கொள்ளுமாறு மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார். 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற தேசிய உணர்வை வலுப்படுத்துவதில் சைனிக் பள்ளிகள் முக்கியப் பங்கு வகிப்பதாகத் தெரிவித்த அவர், செயற்கை நுண்ணறிவு, விண்வெளித் தொழில்நுட்பம் மற்றும் இணையப் பாதுகாப்பு போன்ற வளர்ந்து வரும் துறைகளில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

மாணவர்கள் தங்களது கடமைகளைச் சரிவரச் செய்வதன் மூலம் 'வளர்ச்சியடைந்த பாரதம்' என்ற இலக்கை எட்டுவதற்குப் பங்காற்ற முடியும் எனக் குறிப்பிட்டார். மணிப்பூர் ஆளுநர் திரு அஜய் குமார் பல்லா, முதலமைச்சர் திரு வை. கேம்சந்த் சிங் உள்ளிட்டோர்  இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307855&reg=3&lang=1

***

TV/SE/RJ 


(வெளியீட்டு அடையாள எண்: 2308141) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Manipuri , Assamese , Gujarati , Malayalam