தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
நிதி மோசடி அபாயக் குறியீடு மூலம் ரூ.5,000 கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் சைபர் மோசடியிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
08 SEP 2026 4:39PM by PIB Chennai
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தொலைத்தொடர்புத் துறை அறிமுகப்படுத்தியுள்ள நிதி மோசடி அபாயக் குறியீடு (FRI) மூலம் 15 மாதங்களில் ரூ.5,000 கோடிக்கும் அதிகமான சைபர் மோசடி இழப்புகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் பொதுமக்களின் பணம் அவர்களின் கணக்கிலிருந்து மோசடி செய்யப்படாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு, வங்கி, நிதி மற்றும் சட்டம் ஒழுங்கு அமைப்புகளின் கூட்டு முயற்சியால் இந்தத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. டிஜிட்டல் நுண்ணறிவுத் த்ளம் மூலம் தொலைபேசி எண்களை நடுத்தர, உயர் மற்றும் மிக அதிக அபாய நிலைகளாக வகைப்படுத்தி இந்தச் செயல்பாடு மேற்கொள்ளப்படுகிறது. மேலும், வங்கி, காப்பீடு மற்றும் ஓய்வூதியத் துறைகளிலும் இந்த அமைப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த அபாயக் குறியீடு, பரிவர்த்தனை செய்யப்படும்போதே வினாடிப் பொழுதில் சோதித்துத் தடுப்பதால், விசாரணை மற்றும் புகார்கள் அளிக்கும் சிரமங்கள் தவிர்க்கப்படுகின்றன. சஞ்சார் சாதி தளம் மற்றும் 'சக்சு' மூலம் பொதுமக்களும் இதில் தீவிரமாகப் பங்களித்து வருகின்றனர். சந்தேகத்திற்கிடமான அழைப்புகளை 1930 என்ற எண்ணிலோ அல்லது தேசிய சைபர் குற்றப் புகாரளிக்கும் தளத்திலோ உடனடியாகத் தெரிவிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307871®=3&lang=1
***
TV/PD/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2308094)
வருகையாளர் எண்ணிக்கை : 6