நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மேம்பட்ட உணவு தானிய மேலாண்மைக்காக மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை - இந்திய உணவுக் கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

இடுகை இடப்பட்ட நாள்: 08 SEP 2026 3:11PM by PIB Chennai

உணவு தானிய மேலாண்மையில் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதையும், நவீனமயமாக்கலை துரிதப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறையும், இந்திய உணவுக் கழகமும் 2026-27 நிதியாண்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. புதுதில்லியில் கையெழுத்தான இந்த ஒப்பந்தம், தானிய சேமிப்பில் இழப்புகளைக் குறைத்தல், சேமிப்பு திறனை அதிகரித்தல், கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் தரக்கட்டுப்பாட்டு வழிமுறைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றிற்கு வழிவகை செய்கிறது. மேலும், வணிகச் செயல்பாடுகளில் டிஜிட்டல் மயமாக்கலுக்கும் நவீனத் தொழில்நுட்பத் தீர்வுகளைப் பின்பற்றுவதற்கும் இதில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

1965-ல் நிறுவப்பட்ட இந்திய உணவுக் கழகம், நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்வதில் முக்கியப் பங்காற்றுகிறது. இந்த ஒப்பந்தமானது உணவுக் கழகத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையையும், வளங்களின் திறமையான பயன்பாட்டையும் ஊக்குவிக்கிறது. மேலும், 'டிப்போ தர்பன்' வலைத்தளம் மூலம் கிடங்குகளின் செயல்பாட்டுத் திறனும் மதிப்பிடப்படுகிறது.

இந்த நவீனமயமாக்கல் மற்றும் செயல்திறன் அடிப்படையிலான கட்டமைப்பு மூலம், உணவு தானிய வளங்கள் செலவு குறைந்த மற்றும் வெளிப்படையான முறையில் பயன்படுத்தப்படுவதை மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறையும், இந்திய உணவுக் கழகமும் உறுதி செய்கின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307810&reg=3&lang=1

***

TV/PD/RJ   


(வெளியீட்டு அடையாள எண்: 2307986) வருகையாளர் எண்ணிக்கை : 16
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Kannada