பிரதமர் அலுவலகம்
ஊட்டச்சத்து மாதம் முன்முயற்சிகள் மற்றும் அங்கன்வாடி அமைப்பை வலுப்படுத்துவது குறித்த கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
08 SEP 2026 12:45PM by PIB Chennai
மத்திய அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி எழுதியுள்ள கட்டுரை ஒன்றை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
மாத்ரு வந்தனா யோஜனாவின் 10 ஆண்டுகள் நிறைவு மற்றும் ஊட்டச்சத்து மாதம் குறித்த இக்கட்டுரை, அங்கன்வாடி அமைப்பை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கிறது. நேரடி பலன் பரிமாற்றம், சமூக ஆய்வுகள் மற்றும் சத்தான உணவுகள் வாயிலாக குழந்தைகள், பெண்கள் மற்றும் வளரிளம் பெண்களுக்கு எவ்வாறு ஆதரவு அளிக்கப்படுகிறது என்பதை இக்கட்டுரை கோடிட்டுக் காட்டுகிறது. "நமது அங்கன்வாடி, நமது பொறுப்பு" என்ற தொலைநோக்குப் பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சிகள், ஊட்டச்சத்து குறைபாடற்ற மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான பாதையை அமைத்துத் தருகின்றன என்று அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
"மாத்ரு வந்தனா யோஜனாவின் 10 ஆண்டுகள் மற்றும் ஊட்டச்சத்து மாதம் குறித்து மத்திய அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி எழுதியுள்ள இக்கட்டுரை, அங்கன்வாடி அமைப்பை மக்கள் இயக்கமாக உருவெடுக்கச் செய்வதற்கான செய்தியை வழங்குகிறது. நேரடிப் பலன் பரிமாற்றம், சமூக ஆய்வுகள் மற்றும் சத்தான உணவு ஆகியவை குழந்தைகள், பெண்கள் மற்றும் வளரிளம் பெண்களுக்கு எவ்வாறு உறுதுணையாக இருக்கின்றன என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த முயற்சி 'நமது அங்கன்வாடி, நமது பொறுப்பு' என்ற தொலைநோக்குப் பார்வையுடன், ஊட்டச்சத்துக் குறைபாடற்ற, வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான வழியை வகுப்பதாக தெரிவித்துள்ளார்.”
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307756®=3&lang=1
***
TV/SE/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2307864)
வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam