நிலக்கரி அமைச்சகம்
மின் துறைக்கான நிலக்கரி உற்பத்தி நாள்தோறும் சீரான முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
07 SEP 2026 10:12AM by PIB Chennai
மின் துறைக்கான நிலக்கரி உற்பத்தி கடந்த நான்கு நாட்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 03.09.2026 அன்று 370 ரேக் (ரயில் பெட்டி) இருந்த நிலக்கரி உற்பத்தி, 06.09.2026 அன்று 444 ஆக அதிகரித்துள்ளது. இது நாளொன்றுக்கு 74 ரயில் பெட்டிகள் வீதம் நிலக்கரி உற்பத்தி அதிகரித்து வருவதை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. இதில் 06.09.2026 அன்று மட்டும் 31 ரேக்குகள் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. மின் துறைக்கு நிலக்கரி விநியோகத்தைச் சீரான முறையில் அதிகரிக்க கோல் இந்தியா நிறுவனம், அதன் துணை நிறுவனங்கள், சிங்கரேணி காலியரீஸ் நிறுவனம், அதன் சொந்தப் பயன்பாட்டிற்கானச் சுரங்க நிறுவனங்கள் மேற்கொண்ட தொடர் முயற்சிகளை இது பிரதிபலிப்பதாக உள்ளது.
மின் துறைக்கான நிலக்கரி உற்பத்தியில் ஏற்பட்டு வரும் மாற்றம்
நான்கு நாட்களில், மின் துறைக்கான மொத்த நிலக்கரி உற்பத்தி படிப்படியாக மேம்பட்டுள்ளது:
03.09.2026: நாளொன்றுக்கு 370 ரேக்குகள்
04.09.2026: நாளொன்றுக்கு 387 ரேக்குகள் (முந்தைய தினத்தைக் காட்டிலும் 17 அதிகம்
05.09.2026: நாளொன்றுக்கு 413 ரேக்குகள் (முந்தைய தினத்தைக் காட்டிலும் 26 அதிகம்
06.09.2026: நாளொன்றுக்கு 444 ரேக்குகள் (முந்தைய தினத்தைக் காட்டிலும் 31 அதிகம்
இது நான்கு நாட்களில், நாளொன்றுக்கு 74 ரேக்குகள் வீதம் (சுமார் 20%) உற்பத்தியில் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த முன்னேற்றத்தை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. 06.09.2026 அன்று, நிலக்கரி உற்பத்தி நாளொன்றுக்கு 444 ரேக்குகள் என்ற நிலையை எட்டியுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட தேவையில் 25 சதவீதத்திற்கும் குறைவான நிலக்கரி கையிருப்பு மட்டுமே உள்ள முக்கிய அனல் மின் உற்பத்தி நிலையங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி கையிருப்பை மேம்படுத்தும் வகையில், நிலக்கரி விநியோகத்தைச் சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மின் துறைக்கு வழங்கப்படும் நிலக்கரி ரேக்குகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றத்தைத் தக்கவைக்கவும், தேவைகளைப் பூர்த்தி செய்யவும் மத்திய நிலக்கரி அமைச்சகம், கோல் இந்தியா நிறுவனம் ஆகியவை தொடர்ந்து உறுதியுடன் செயல்பட்டு வருகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307282®=3&lang=1
***
TV/SV/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2307477)
வருகையாளர் எண்ணிக்கை : 5