குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கிராமப்புற தொழில்முனைவோர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் காதி, கிராமப்புற தொழில்துறை ஆணையம்

இடுகை இடப்பட்ட நாள்: 07 SEP 2026 12:13PM by PIB Chennai

இந்திய கிராமப்புறங்களில் வசிப்போரை தொழில்முனைவோர்களாக உயர்த்தும் வாய்ப்பை மத்திய சிறு குறு, நடுத்தர நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கும் காதி, கிராமப்புற தொழில்துறை ஆணையம் வழங்கியுள்ளது. தேனீ வளர்ப்பு, வெட்டிவேர் மூலம் பத்திகள், சாம்பிராணி தயாரிப்பு உள்ளிட்ட தொழில்களுக்கான நிதியுதவி, பயிற்சி, உபகரணங்கள் வழங்கி வியாபாரத்திற்கு உறுதுணையாக இருந்து கிராமப்புற தொழில்முனைவோரை அடுத்தக்கட்டத்திற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் வசிப்போரின் பாரம்பரிய திறமைகளை வெளிக்கொணர்ந்து, அவர்களை சிறந்த தொழில்முனைவோர்களான மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கம்.

காதி, கிராமப்புறத் தொழில்துறை ஆணையம் மூலம் கன்னியாகுமரியை சேர்ந்த அஜின் என்பவர் வெற்றிகரமான தொழில்முனைவோராக உயர்ந்துள்ளார். மார்த்தாண்டம் தேன் தயாரிப்பு நிறுவனம் மூலம் அக்மார்க் தரச்சான்றிதழ் பெற்ற தேன் மற்றும் தேனுடன் கலந்த உலர் பழங்களை விற்பனை செய்து வருகிறார். தேனீ வளர்ப்பு குறித்து விவசாயிகள், பொருளாதரத்தில் மிகவும் பின் தங்கியோர், பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். மாநில, மண்டல, மாவட்ட அளவிலான நிகழ்ச்சிகள், அகில இந்திய வானொலி, தூர்தர்ஷன் ஆகியவற்றில் பங்கேற்று தேனீ வளர்ப்புக் குறித்து தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அஜினின் இந்தப் பயணம் வெற்றிகரமான தொழில்முனைவோராக மாற மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

இதேபோல், சுந்தரராஜ் என்பவர் வெட்டிவேர் மூலம் வெற்றிகரமான தொழில்முனைவோராக உயர்ந்துள்ளார். இவர் தன்னுடைய பியூர் ஹெல்த் ஹெர்பல் அகர்பத்தி நிறுவனம் மூலம், அகர்பத்திகள், மூலிகைப் பொருட்கள், வெட்டிவேர் அகர்பத்தி, வெட்டிவேர் சாம்பிராணி ஆகியப் பொருட்களைத் தயாரித்து வழங்கி வருகிறார்.

முருகேசன் என்பவர் வாழை மரங்களில் இருந்து கிடைக்கும் கழிவுப் பொருட்களை வீணாக்காமல், அதை அலங்கார பொருட்களாக மாற்றும் தொழில் செய்து வருகிறார். இவருடைய திறமையைப் பாராட்டி மத்திய, மாநில அரசுகள் விருதுகள் வழங்கி கவுரப்படுத்தியுள்ளன. கிராமப்புறங்களில் தொழில்முனைவோர்களாக மாற விரும்புவோர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் முருகேசன், இதுதொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.         

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307332&reg=3&lang=1

***

TV/LN/SM  


(வெளியீட்டு அடையாள எண்: 2307456) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali-TR , Gujarati , Kannada