உள்துறை அமைச்சகம்
கோவா மாநில விவகாரங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் - மத்திய அமைச்சர் திரு அமித் ஷா தலைமை வகித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
06 SEP 2026 6:30PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்துடன் இணைந்து, கோவா மாநில விவகாரங்கள் தொடர்பாக இன்று (06.09.2026) பனாஜியில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் மத்திய உள்துறைச் செயலாளர், புலனாய்வுப் பிரிவு இயக்குநர், கோவா உள்துறை அமைச்சகத்தின் பிற உயர் அதிகாரிகள், இந்தியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் போது, கோவா முதலமைச்சர், தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோர், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பான முக்கிய விஷயங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவுக்கு விளக்கினர். மூன்று புதிய குற்றவியல் சட்டங்களைச் செயல்படுத்துதல், போதைப்பொருள் தடுப்புச் சட்டம் தொடர்பான விஷயங்கள், கடலோரப் பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை, காவல்துறையை நவீனமயமாக்குதல் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கையும் கடலோரப் பாதுகாப்பையும் பேணுவதற்காக பல முக்கிய முன்முயற்சிகளை மேற்கொண்ட கோவா அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா பாராட்டுத் தெரிவித்தார். இந்த முயற்சிகள் கோவாவை 'போதை இல்லாத மாநிலமாக' மாற்றுவதற்கும், இணையவழிக் குற்றங்களை வெற்றிகரமாகக் கையாள்வதற்கும் பங்களித்துள்ளன என்று அவர் கூறினார்.
திறன் மேம்பாடு, வளர்ச்சி தொடர்பான பிரச்சனைகளில் கோவா போன்ற சிறிய மாநிலங்களுக்கு முழு ஆதரவும் உதவியும் கிடைப்பதை உறுதி செய்வதில் பிரதமர் திரு நரேந்திர மோடி அரசு உறுதியாக உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா கூறினார். மத்திய அரசுடன் நெருங்கிய ஒருங்கிணைப்புடனும் மாநில அரசு செயல்படும் என்று கோவா முதலமைச்சர் உறுதியளித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307192®=3&lang=1
***
SS/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2307221)
வருகையாளர் எண்ணிக்கை : 13