பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
சுமார் 3,800 குழந்தைத் தொழிலாளர்களை மீட்டது, குழந்தை உரிமைகளின் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம்
இடுகை இடப்பட்ட நாள்:
04 SEP 2026 11:04AM by PIB Chennai
மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் குழந்தை உரிமைகளின் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம், 2026 ஜூன் 12 முதல் ஆகஸ்ட் 31 வரை, நாடு தழுவிய மீட்பு மற்றும் மறுவாழ்வு இயக்கத்தை நடத்தியது. இந்தக் காலகட்டத்தில், குழந்தைத்தொழிலாளர்களைக் கண்டறிந்து, அத்தகைய செயல்பாடுகளில் இருந்து அவர்களை மீட்டு, மறுவாழ்வு அளிப்பதற்காக, சம்பந்தப்பட்ட மாநில / யூனியன் பிரதேச அரசுகள், மாவட்ட நீதிமன்றங்கள், தொழிலாளர் துறைகள், காவல் அதிகாரிகள், ஆகியோருடன் இணைந்து ஆணையம் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இந்த இயக்கத்தின் போது மாநில அரசின் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து குழந்தை உரிமைகளின் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம், நாடு முழுவதும் ஏறத்தாழ 3,800 குழந்தைகளை மீட்டது. மேலும், இந்தக் காலகட்டத்தில் சுமார் 575 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2306641®=3&lang=1
***
SS/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2306804)
வருகையாளர் எண்ணிக்கை : 9