குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 04 SEP 2026 5:38PM by PIB Chennai

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

குடியரசுத்தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

"ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள நமது ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிரியர் தினம், இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவரும், சிறந்த கல்வியாளரும் தத்துவஞானியுமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது. அவர் ஒரு மிகச்சிறந்த ஆசிரியராகவும் திகழ்ந்தார். இந்த வேளையில், அவருக்கு எனது மரியாதையைச் செலுத்துகிறேன்.

ஆசிரியர்கள், தங்கள் வழிகாட்டுதல், அறிவுரைகள் மூலம், மாணவர்களின் திறமைகளை வளர்ப்பதிலும் குணநலன்களை வலுப்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். மாணவர்களை நல்ல மனிதர்களாக உருவாக்குவது அவர்களின் கடமையாகும். அர்ப்பணிப்பும் அக்கறையும் கொண்ட ஓர் ஆசிரியர், மாணவர்களின் தனித்துவமான ஆற்றலை அடையாளம் கண்டு, அவர்களுக்கு உத்வேகத்தின் ஊற்றாகத் திகழ்ந்து, சிறந்து விளங்க அவர்களை ஊக்குவிப்பார். 

ஆசிரியர்கள் தங்கள் அறிவைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டு, தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்டு, புதுமையான கற்பித்தல் முறைகளைக் கையாள வேண்டும். அவர்கள் மாணவர்களிடையே சுயசிந்தனையை ஊக்குவித்து, தேடல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும்.

அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து ஆசிரியர்களும், தேசத்தை மேலும் உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லும் அறிவொளி பெற்ற தலைமுறைகளை உருவாக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்."

----

(Release ID : 2306743) 

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2306800) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: Bengali , English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Malayalam