இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
ஞாயிற்றுக் கிழமைகளில் மிதிவண்டி ஓட்டும் நிகழ்வின் 89-வது வாரம் : சூரத்தில் மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா பங்கேற்கிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
04 SEP 2026 4:25PM by PIB Chennai
வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான போதை பொருள் இல்லாத இளைஞர்கள் என்ற கருப்பொருளுடன், ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள் எனப்படும் ஞாயிற்றுக் கிழமைகளில் மிதிவண்டி ஓட்டும் நிகழ்வின் 89-வது பதிப்பு 2026 செப்டம்பர் 6-ம் தேதி நடைபெறுகிறது.
சூரத்தில் நடைபெறும் நிகழ்வில் மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தலைமை வகிக்கவுள்ளார். இதில், குஜராத் துணை முதலமைச்சர் திரு ஹர்ஷ் சங்வியும் பங்கேற்கிறார்.
ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டும் நிகழ்வின் இந்த பதிப்பு, நமது இளைஞர்களை போதைப்பொருட்களிலிருந்து விலகி, ஆரோக்கியமான, சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைத் தழுவ ஊக்குவிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்று திரு மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2306717®=3&lang=1
---
SS/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2306792)
வருகையாளர் எண்ணிக்கை : 8