குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் நாளை சென்னை வருகிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
04 SEP 2026 3:44PM by PIB Chennai
குடியரசுத் துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன், நாளை (2026 செப்டம்பர் 5), சென்னைக்கு ஒரு நாள் பயணம் மேற்கொள்கிறார்.
தமது பயணத்தின் போது, குடியரசு துணைத்தலைவர், இதய நோய்களுக்கான சிகிச்சையை மேம்படுத்துவதற்கான தேசிய கல்விசார் மாநாடான 'இந்தியா வால்வ்ஸ் 2026'-ல் பங்கேற்பதுடன், சென்னை கிண்டியில் இந்திய வால்வு பதிவகத்தையும் தொடங்கி வைக்கிறார்.
தினமலர் நாளிதழின் 75 ஆண்டுகள் நிறைவையொட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறவுள்ள நினைவு அஞ்சல் தலை வெளியீட்டு விழாவிலும் திரு சி பி ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார்.
-----
(Release ID : 2306709)
SS/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2306783)
வருகையாளர் எண்ணிக்கை : 23