சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் கழிவுப் பொருட்கள் சேகரிப்போருக்கு நமஸ்தே அட்டைகளை மத்திய இணையமைச்சர் திரு ராம்தாஸ் அதவாலே வழங்கினார்

இடுகை இடப்பட்ட நாள்: 04 SEP 2026 9:02AM by PIB Chennai

புதுதில்லி மாநகராட்சியின் நஜஃப்கர் மண்டலத்தில் கழிவுப் பொருட்கள் சேகரிப்போருக்கு நமஸ்தே அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சியை மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு ராம்தாஸ் அதவாலே தொடங்கி வைத்தார். நஜஃப்கர் மண்டலத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற கழிவுப் பொருட்கள் சேகரிப்போருக்கு ஆயுஷ்மான் அட்டைகளும் வழங்கப்பட்டன.

நாடு முழுவதும் துப்புரவுப் பணியாளர்களின் பாதுகாப்பு, கண்ணியம், சமூகப் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்படும் தேசிய இயந்திரமயமாக்கப்பட்ட துப்புரவு நடவடிக்கைகள் திட்டத்தின் (நமஸ்தே) கீழ், நமஸ்தே அட்டைகள் வழங்கப்படுகின்றன. இந்திய நகரங்களைத் தூய்மையாக வைத்திருப்பதில் கழிவுப் பொருட்கள் சேகரிப்போரின் அர்ப்பணிப்புமிக்க பங்களிப்பை அமைச்சர் பாராட்டினார். அவர்களின் பணிச்சூழலை மேம்படுத்த அரசின் முழுமையான ஒத்துழைப்பும் ஆதரவும் தொடர்ந்து வழங்கப்படும் என உறுதியளித்தார். நஜஃப்கர் மண்டலத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2306622&reg=3&lang=1

***

SS/PD/SM   


(வெளியீட்டு அடையாள எண்: 2306723) வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Telugu , Kannada