வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
ஆஸ்திரியா, நெதர்லாந்து நாடுகளுக்குத் திரிபுராவிலிருந்து 18 மெட்ரிக் டன் பாரம்பரிய அரிசி வகை ஏற்றுமதி செய்யப்பட்டது
இடுகை இடப்பட்ட நாள்:
03 SEP 2026 11:45AM by PIB Chennai
வேளாண், பதனப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் ஆதரவுடன், திரிபுராவிலிருந்து தேசிய இயற்கை வேளாண் உற்பத்தித் திட்ட (என்பிஒபி) சான்றளிக்கப்பட்ட நான்கு வகையிலான 18 மெட்ரிக் டன் பாரம்பரிய அரிசி, ஆஸ்திரியா, நெதர்லாந்து நாடுகளுக்கு 2026 செப்டம்பர் 2 அன்று ஏற்றுமதி செய்யப்பட்டது. இது உள்ளூர் விவசாயிகளுக்குப் புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் முறையான, ஏற்றுமதி சார்ந்த உற்பத்தியின் மூலம் சர்வதேசச் சந்தைகளுடன் திரிபுராவின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதிலும் ஒரு முக்கிய நடவடிக்கையைக் குறிக்கிறது.
என்பிஒபி சான்றளிக்கப்பட்ட பாரம்பரிய அரிசியில் நான்கு வகைகள் உள்ளன: அவை, நறுமணமிக்க காலி காசா அரிசி, நறுமணமிக்க ஹரிநாராயன் அரிசி, பைரோன் அரிசி (வெள்ளை நிற ஒட்டும் தன்மைக் கொண்ட அரிசி), மைமி ஹங்கா அரிசி (கருப்பு அரிசி) ஆகியவையாகும். திரிபுரா மாநில இயற்கை வேளாண்மை மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் செயல்படும் திரிபுரா வேளாண் உற்பத்தியாளர் நிறுவனங்களிடமிருந்து இந்த அரிசி பெறப்பட்டது. இந்திய இயற்கை வேளாண் பொருட்களை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யும் முன்னனி நிறுவனமான சோனாபேட்டில் உள்ள பிரதிதி ஆர்கானிக் ஃபுட்ஸ் நிறுவனம் இந்த அரிசி வகைகளை ஏற்றுமதி செய்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2306227®=3&lang=1
***
SS/IR/GS/SU
(வெளியீட்டு அடையாள எண்: 2306337)
வருகையாளர் எண்ணிக்கை : 4