நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
வெங்காயக் கையிருப்பை பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்புகிறது மத்திய அரசு - தமிழ்நாட்டுக்கு 840 டன் வெங்காயம் ரயில் மூலம் வந்தடைந்தது
இடுகை இடப்பட்ட நாள்:
01 SEP 2026 2:38PM by PIB Chennai
போதுமான அளவு வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்வதற்கும், விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கும், முக்கிய பகுதிகளுக்கு ரயில் மூலமாகவும் சாலைப் போக்குவரத்து மூலமாகவும், மத்திய அரசு வெங்காயக் கையிருப்பை விநியோகிக்கத் தொடங்கியுள்ளது. விலை நிலைப்படுத்தல் முறையின் கீழ் தேசியக் கூட்டுறவு அமைப்புகளான நேஃபெட், என்சிசிஎஃப் ஆகியவற்றின் கீழ் வெங்காயத்தை விற்பனை செய்யும் பணி 2026 ஆகஸ்ட் 24 அன்று தொடங்கியது.
இந்த முன்முயற்சியின் ஒரு பகுதியாக, நாசிக்கிலிருந்து இரண்டு சிறப்பு சரக்கு ரயில்களில் வெங்காயம் அனுப்பப்பட்டுள்ளன. 450 மெட்ரிக் டன் வெங்காயத்தை ஏற்றிச் சென்ற முதல் ரயில், 27 ஆகஸ்ட் 2026 அன்று நள்ளிரவில் தில்லியை அடைந்தது. இதில், 140 மெட்ரிக் டன் வெங்காயம், வாரணாசி, லக்னோ, சண்டிகர், அமிர்தசரஸ் ஆகிய இடங்களுக்கும் , மீதமுள்ளவை தில்லி பகுதிக்கும் விநியோகிக்கப்பட்டது.
840 மெட்ரிக் டன் வெங்காயத்தை ஏற்றிச் சென்ற இரண்டாவது ரயில் பெட்டி, நேற்று (2026 ஆகஸ்ட் 31) சென்னையை வந்தடைந்தது . தமிழ்நாடு அரசு, ஒரு குடும்ப அட்டைக்கு 1 கிலோ என்ற தேவைக்கு ஏற்ப, இந்த வெங்காயத்தைப் பொது விநியோகத் திட்டம் மூலம் விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளது. மாவட்ட வாரியாக, இந்த வெங்காயம் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் விநியோகிக்கப்பட வாய்ப்புள்ளது.
பரவலாக வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக 30-க்கும் மேற்பட்ட லாரிகள் அனுப்பப்பட்டு, 19 நகரங்களில் சில்லறை விற்பனை முயற்சிகள் கணிசமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளன. நுகர்வோருக்குப் போதுமான வெங்காயம் மலிவு விலையில் கிடைப்பதை உறுதி செய்வதோடு, வெங்காய விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதிலும் அரசு உறுதியாக உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2305416®=3&lang=1
----
SS/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2305654)
வருகையாளர் எண்ணிக்கை : 5