சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அறிவிக்கப்படாத, இடம் பெயர்வோர், பகுதி நாடோடி சமூகங்களுக்கான மேம்பாடு குறித்து விவாதிப்பதற்கான நிகழ்ச்சி புதுதில்லியில் நாளை நடைபெறுகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 31 AUG 2026 5:12PM by PIB Chennai

சமூக நீதி, அதிகாரமளித்தல் துறையின் கீழ் இயங்கும், அறிவிக்கப்படாத, நாடோடி, பகுதி நாடோடி சமூகங்களுக்கான மேம்பாடு மற்றும் நல வாரியம், நாளை புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தின் பீம் அரங்கில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்ச்சியில், மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு பி எல் வர்மா ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். மேலும், அறிவிக்கப்படாத, நாடோடி, பகுதி நாடோடி சமூகங்களுக்கான மேம்பாடு மற்றும் நல வாரியம் உறுப்பினர்களான திரு பரத்பாய் பாபுபாய் பட்னி, திரு பிரவீன் சிவாஜிராவ் குகே உள்ளிட்ட பிரதிநிதிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர்.

சமூகத் தலைவர்கள், கைவினைஞர்கள், பயனாளிகள் உட்பட, அறிவிக்கப்படாத, நாடோடி, பகுதி நாடோடி சமூகங்களைச் சேர்ந்த சுமார் 700 உறுப்பினர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2305035&reg=3&lang=1

***

SS/IR/LDN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2305185) வருகையாளர் எண்ணிக்கை : 49
இந்த வெளியீட்டை படிக்க: Kannada , English , Urdu , हिन्दी