பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

16 பாதுகாப்புப் பொதுத்துறை நிறுவனங்களின் வருடாந்திர செயல்பாடு குறித்து பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஆய்வு செய்ய உள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 31 AUG 2026 1:09PM by PIB Chennai

புதிய உள்நாட்டு தொழில்நுட்பங்களை உருவாக்குதல், ஏற்றுமதியை அதிகரித்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டும் வகையில், 16 பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களின் வருடாந்திர செயல்பாடு குறித்த ஆய்வைப் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் 2026 செப்டம்பர் 1 அன்று புதுதில்லியில் மேற்கொள்ள உள்ளார்.

இந்நிகழ்வில், ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனம், மசகான் டாக் கப்பல் கட்டுமான நிறுவனம், பாரத் மின்னணு நிறுவனம், பாரத் டைனமிக்ஸ் நிறுவனம், கார்டன் ரீச் கப்பல் கட்டுமானர்கள் மற்றும் பொறியியலாளர்கள் நிறுவனம், பிஈஎம்எல், மிதானி ஆகிய 7 பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களின் முதன்மை மேலாண் இயக்குநர்கள் கலந்துகொண்டு 2025 – 26-ம் நிதியாண்டின் அரசின் பங்கு மூலதனத்திற்கான ஈவுத்தொகைக் காசோலைகளை பாதுகாப்பு அமைச்சரிடம் வழங்க உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் தற்சார்பு இந்தியா பாதுகாப்புப் பொதுத்துறை நிறுவனங்கள் – தற்சார்பை ஒட்டிய பாதுகாப்புப் பொதுத்துறை நிறுவனங்களின் பயணம், பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், நவீன உற்பத்தி செயல்முறைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பாதுகாப்புப் பொதுத்துறை நிறுவனங்களால் தொடங்கப்பட்ட திஷா எனும் முன்முயற்சி, ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தின் நவீனமயமாக்கலுக்கான திட்டம், உள்நாட்டுமயமாக்கலுக்கான திட்டம் ஆகிய 4 புத்தகங்களை திரு ராஜ்நாத் சிங் வெளியிட உள்ளார்.

2025 - 26-ம் நிதியாண்டில் பாதுகாப்புத் பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகள் பாராட்டத்தக்க வகையில் இருந்தது. இதன் மொத்த வர்த்தகம் ரூ.1.29 லட்சம் கோடியாக இருந்தது. இது 2024 - 25-ம் நிதியாண்டை விட 15.4 சதவீதம் அதிகமாகும். 2025 - 26-ம் ஆண்டு பாதுகாப்புப் பொதுத்துறை நிறுவனங்களின் வரிக்குப் பிந்தைய மொத்த வரவு ரூ.23,136 கோடியாகும். இது அதன் முந்தைய ஆண்டைவிட 15.6 சதவீதம் அதிகமாகும். 2025 - 26-ம் ஆண்டில் பாதுகாப்புப் பொதுத்துறை நிறுவனங்களின் ஏற்றுமதி முந்தைய நிதியாண்டை விட, 151.2 சதவீதம் அதிகமாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304900&reg=3&lang=1

***

SS/IR/LDN/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2305009) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati