பாதுகாப்பு அமைச்சகம்
கூட்டுப் போர்முறை ஆய்வக மையத்தின் விரிவுரைக் கூட்டம் புதுதில்லியில் நடைபெற உள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
31 AUG 2026 1:12PM by PIB Chennai
கூட்டுப் போர்முறை ஆய்வக மையத்தின் வருடாந்திர உயர்நிலை விரிவுரையின் இரண்டாவது கூட்டத்தை, புதுதில்லி மானக்ஷா மையத்தில் 2026 செப்டம்பர் 1 அன்று பாதுகாப்பு இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் தொடங்கி வைக்க உள்ளார். இந்நிகழ்வில் நாட்டின் கட்டமைப்பிற்கு அடுத்த தலைமுறையின் திறனை பயன்படுத்துதல் என்ற தலைப்பில் அமைச்சர் சிறப்புரையாற்ற உள்ளார்.
இந்த ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, பாதுகாப்புப் படைகளின் பார்வையில் தேசிய மறுமலர்ச்சி என்ற தலைப்பில் இந்த விரிவுரை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது. இதில் கூட்டுத்தன்மை, ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் வளர்ந்து வரும் அம்சங்கள் என்ற தலைப்பில் கூட்டுப் போர்முறை ஆய்வக மையத் தலைவர் ஏர் மார்ஷல் தேஜிந்தர் சிங் உரையாற்ற உள்ளார். குடிமை – ராணுவ ஒருங்கிணைப்பு: தேசிய வளர்ச்சிக்கான வழிவகை என்ற தலைப்பில் ஓய்வுபெற்ற லெப்ஃடினன்ட் ஜெனரல் ராஜ் சுக்லாவும், அறிவார்ந்த முறையில் போரிடுதல்: பல்வேறு கள செயல்பாடுகள், கூட்டுத்தன்மையின் கருத்து என்ற தலைப்பில் ராணுவ துணைத் தளபதி லெப்ஃடினன்ட் ஜெனரல் சந்தீப் ஜெயினும் சிறப்புரையாற்ற உள்ளனர்.
கூட்டுத்தன்மை, ஒருங்கிணைப்பு, பல்வேறு கள செயல்பாடுகள், குடிமை – ராணுவ ஒருங்கிணைப்பு, நாட்டைக் கட்டமைப்பதில், ஆயுதப் படையினரின் பங்களிப்பு ஆகியவை குறித்து விவாதிக்க, உயர் தலைவர்கள், பிரபல நிபுணர்கள் ஆகியோரை இந்த விரிவுரை நிகழ்ச்சி ஒருங்கிணைக்கும்
ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்தின் கீழ் 2007-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட கூட்டுப் போர்முறை ஆய்வக மையம் முப்படைகளின் சிந்தனைக் குழுவாகும். இது கூட்டுப் போர்முறை, தேசிய பாதுகாப்பு, தேசிய சக்தியை பயன்படுத்துதல் தொடர்புடைய விவகாரங்கள் குறித்த ஆராய்ச்சி, பகுப்பாய்வு, விவாதங்கள் ஆகியவற்றுக்கான ஒரு அமைப்பாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304901®=3&lang=1
***
SS/IR/LDN/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2304943)
வருகையாளர் எண்ணிக்கை : 20