வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா – பிரேசில் வர்த்தகக் கண்காணிப்பு அமைப்பின் 8–வது கூட்டம் பிரேசிலியாவில் நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 31 AUG 2026 9:54AM by PIB Chennai

இந்தியா – பிரேசில் வர்த்தகக் கண்காணிப்பு அமைப்பின் 8–வது கூட்டம் பிரேசில் நாட்டின் பிரேசிலியா நகரில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வர்த்தகம், தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள வர்த்தகத்துறை செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால், பிரேசில் நாட்டின் வெளிநாட்டு வர்த்தகத்துறை செயலாளர் திரு டாட்டியானா லாசர்டா பிரேசர்ஸ் ஆகியோர் இணைந்து தலைமை தாங்கினார்கள்.

இந்தியா – பிரேசில் இடையே உத்திசார் கூட்டாண்மைக்கு அடிப்படையாக அமைந்துள்ள வலுவான நிறுவன கட்டமைப்பு, பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கான இருதரப்பினரின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பை இக்கூட்டம் பிரதிபலித்தது.

மேலும் வர்த்தகத்துறை செயலாளர் பிரேசில் நாட்டின் தொழில், மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு மார்சியோ எலியஸ் ரோசாவை சந்தித்து இருதரப்பு வர்த்தகம், முதலீட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், முன்னுரிமை துறைகளில் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் விவாதித்தார்.

இந்தியா – பிரேசில் இடையேயான இருதரப்பு வர்த்தகம் சீரான வளர்ச்சி கண்டு 2025 – 26–ல் 15.07 பில்லியன் அமெரிக்க டாலர்களை அடைந்துள்ளது. மருந்துகள், ரசாயனம், பொறியியல் பொருட்கள், இயந்திரங்கள் ஆகிய துறைகளில் மேலும் பன்முகப்படுத்தப்பட்ட, சமநிலையிலான, நீடித்த நட்புறவின் மூலம் 2030–ம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை 30 பில்லியன் அமெரிக்க டாலர்களாக விரிவுபடுத்துவதற்கான தங்களுடைய பகிரப்பட்ட நோக்கத்தை இருதரப்பினரும் மீண்டும் உறுதி செய்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304804&reg=3&lang=1

***

SS/IR/LDN/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2304933) வருகையாளர் எண்ணிக்கை : 17
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Punjabi , Gujarati , Telugu