நிதி அமைச்சகம்
செயற்கை போதைப்பொருள்களுக்கு எதிரான தீவிர நடவடிக்கையில் 18 கிலோ போதைப்பொருள்களை வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம் பறிமுதல் செய்தது
இடுகை இடப்பட்ட நாள்:
29 AUG 2026 5:14PM by PIB Chennai
செயற்கை போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம் 2026 ஆகஸ்ட் 25 அன்று உளவுத்துறை அளித்த துல்லியமான தகவல்களின் அடிப்படையில் நாடு தழுவிய சோதனைகளை மேற்கொண்டது.
இதில் பெங்களூருவில் 14.9 கிலோ போதைப்பொருளும், புனேவில் 2.53 கிலோ போதைப்பொருளும், 878 கிராம் போதை மாத்திரைகளும் என மொத்தம் 18 கிலோவிற்கும் அதிகமான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்விரு வழக்குகளிலும் போதைப்பொருள் தடுப்புச் சட்டம், 1985-ன் விதிகளின் கீழ் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூருவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், புதுதில்லியிலிருந்து ரயில் மூலம் அதிக அளவிலான தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்களைக் கடத்திவருவதாகக் கிடைத்த தகவலையடுத்து, பெங்களூரு ரயில் நிலையத்தை அடைந்த பெண் பயணியிடம் வருவாய்ப் புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி போதைப்பொருளைக் கைப்பற்றினர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304522®=3&lang=1
***
SS/SV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2304555)
வருகையாளர் எண்ணிக்கை : 9