பிரதமர் அலுவலகம்
உலக சமஸ்கிருதத் தினத்தையொட்டி பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
28 AUG 2026 12:06PM by PIB Chennai
ஷ்ராவண பூர்ணிமா தினத்தில் கொண்டாடப்படும் உலக சமஸ்கிருதத் தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஞானம், சிந்தனை, படைப்பாற்றலின் தொடர்ச்சியான ஊடகமாகத் திகழும் சமஸ்கிருத மொழியின் காலத்தால் அழியாத வளமையைக் கொண்டாடுவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சிறப்பான நன்னாளில், இந்தியா, உலகம் முழுவதிலுமுள்ள சமஸ்கிருத மொழியை கற்றுக்கொள்பவர்கள், கற்பிப்பவர்களுடன் இந்த மொழியிலுள்ள காலத்தால் அழியாத மாண்புகளை எதிர்கால சந்ததியினருக்குக் கொண்டு செல்வதற்காக பாடுபடும் அனைவரையும் பாராட்டுவதாகப் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304068®=3&lang=1
***
SS/SV/PS/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2304317)
வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam