பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உத்தராகண்ட் மாநிலம் டெரி கார்வாலில் நடைபெற்ற விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்குப் பிரதமர் இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 23 APR 2026 7:24PM by PIB Chennai

உத்தராகண்ட் மாநிலம் டெரி கார்வால் மாவட்டத்தில் நடைபெற்ற விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தத் துயரச் சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த பிரதமர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் குறிப்பிட்டார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ. 50,000-மும் நிதி உதவி வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில்  அவர் பதிவிட்டதாவது:

உத்தராகண்ட் மாநிலம் டெரி கார்வால் மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் நேரிட்ட உயிரிழப்பு பற்றி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். இந்தத் துயரச் சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்குத் தலா  ரூ. 50,000 வழங்கப்படும்: பிரதமர் நரேந்திரமோடி

***

(Release ID: 2254966)

TV/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2304148) வருகையாளர் எண்ணிக்கை : 9