பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கிராம ஊராட்சிகளில் டிஜிட்டல் உள்கட்டமைப்பை வலுப்படுத்த பொதுமக்களின் பங்களிப்புக்கு மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் அழைப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 27 AUG 2026 12:57PM by PIB Chennai

கிராமப்புறங்களில் டிஜிட்டல் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், பொதுமக்கள் தங்களது பங்களிப்பை வழங்க 'தான்வீர்' திட்டத்தில் இணையுமாறு மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் தனிநபர்கள், அமைப்புகள் கணினிகளைத் தகுதியான கிராம ஊராட்சிகளுக்கு நேரடியான, எளிய, வெளிப்படையான முறையில் நன்கொடையாக வழங்க முடியும்.

எனது பஞ்சாயத்து செயலி மூலம் மாநில அரசுகளால் சரிபார்க்கப்பட்ட கிராம பஞ்சாயத்துகளுக்குத் தேவைகளுக்கேற்ப கணினிகளை நன்கொடையாக வழங்கலாம். 'டொனேட் கம்ப்யூட்டர்' என்பதைத் தேர்வு செய்வதன் மூலம் டிஜிஹாட் தளத்தில் கணினிகளை அனுப்ப முடியும். இதற்காக தனியாகப் பதிவுசெய்யத் தேவையில்லை. கணினி விநியோகத்தை உடனுக்குடன் கண்காணிக்க முடிவதுடன், ஊராட்சிச் செயலாளர் பெற்றுக்கொண்ட பிறகு மின்னணு சான்றிதழும், கணினிகளை நன்கொடையாக  அளிக்கப்படுகிறது.  

திட்டமிடல், நிதி மேலாண்மை, ஆவணப் பராமரிப்பு, குடிமக்களுக்கான சேவை வழங்கலை மேம்படுத்த இந்த நடவடிக்கை உதவுகிறது. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், பெருநிறுவனங்கள் சமூகப் பொறுப்புணர்வு நிதியின் கீழ் நிறுவனங்கள் இதில் பங்கேற்கலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2303659&reg=3&lang=1

****

SS/PD/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2303793) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Gujarati , Kannada