அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இந்தியாவின் ஆளில்லா விமானங்களின் திறன்களை வலுப்படுத்தும் வகையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சிறிய ரக எரிவாயு எந்திரங்களைத் தேசிய விண்வெளி ஆய்வகம் அறிமுகப்படுத்தியுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
25 AUG 2026 2:51PM by PIB Chennai
விமானங்களுக்கு மேம்பட்ட உந்து விசையளிக்கும் தொழில்நுட்பத்தில் தன்னிறைவு அடையும் வகையில் ஒரு முக்கிய நடவடிக்கையாகத் தேசிய விண்வெளி ஆய்வகம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மூன்று சிறிய ரக எரிவாயு எந்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை முறையே 5 கிலோ, 50 கிலோ, 100 கிலோ உந்து விசை திறன் கொண்ட எந்திரங்களாகும்.
உள்நாட்டு பாதுகாப்புத் தொழில்நுட்பத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சிறிய அளவிலான எந்திர அமைப்புகள் ஆளில்லா விமானங்கள் மற்றும் இடைமறித்து தாக்கும் ட்ரோன்கள், சிறிய ரக ஏவுகணைகளில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான நிகழ்ச்சியில் நாட்டின் பாதுகாப்பு, அறிவியல் துறைகளைச் சேர்ந்த தலைவர்கள் பலர் பங்கேற்றனர். முப்படைகளின் தலைமைத் தளபதி ஏர் மார்ஷல் தெஜிந்தர் சிங் சிறப்பு விருந்தினராக இதில் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய தேசிய வான்வெளி ஆய்வகத்தின் இயக்குநர் டாக்டர் அபய் பசில்கர் நாட்டின் வளர்ந்து வரும் ட்ரோன் தொழில்நுட்பத்தில் இந்த ஆய்வகத்தின் பங்களிப்பை விரிவாக எடுத்துரைத்தார். விண்வெளித் துறையில் புத்தொழில் நிறுவனங்கள் உட்பட இந்தியத் தொழில் துறைகள் இத்தகைய மேம்பட்ட எந்திரங்களைப் பெருமளவில் உற்பத்திச் செய்யும் திறனைக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2303065®=3&lang=1
***
SS/SV/GS/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2303294)
வருகையாளர் எண்ணிக்கை : 12