நிதி அமைச்சகம்
மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 2 வரை கனடா, அமெரிக்காவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
24 AUG 2026 3:40PM by PIB Chennai
மத்திய நிதி, பெரு நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் 2026 ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 2 வரை கனடா, அமெரிக்காவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார்.
இருதரப்புப் பொருளாதார, நிதிசார் கூட்டாண்மைகளை வலுப்படுத்துதல், முதலீட்டுத் தொடர்புகளை வலுப்படுத்துதல், பகிரப்பட்ட உலகளாவிய பொருளாதார முன்னுரிமைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகியவை இப்பயணத்தின் நோக்கமாகும்.
கனடாவின் டொரோண்டோ நகரில் பயணம் மேற்கொள்ளும் திருமதி நிர்மலா சீதாராமன், அந்நாட்டு நிதியமைச்சர் திரு ஃபிரான்காய்ஸ் பிலிப் சாம்பேனுடன் இணைந்து முதலாவது பொருளாதார, நிதி உரையாடலில் பங்கேற்கிறார். இது பேரியல் பொருளாதார நிலவரங்கள், நிதித்துறை ஒத்துழைப்பு, இருதரப்பு முதலீட்டு வாய்ப்புகள், பகிரப்பட்ட சர்வதேச முன்னுரிமைகள் தொடர்பாக கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும், புதுப்பிக்கப்பட்ட இந்தியா –கனடா கூட்டாண்மையின் பொருளாதார, நிதிசார் அடிப்படையை வலுப்படுத்தவும், இருதரப்புக்கும் முக்கியத் தளமாக இருக்கும்.
முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள், தலைவர்கள், உயர் பிரதிநிதிகளுடனான முதலீட்டு வட்டமேசை கூட்டத்தில் திருமதி நிர்மலா சீதாராமன் பங்கேற்க உள்ளார்.
இவற்றில் எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு, முக்கிய கனிமங்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள் இடம்பெறுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2302700®=3&lang=1
****
SS/IR/LDN/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2302896)
வருகையாளர் எண்ணிக்கை : 40