வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா – கம்போடியா இடையே வர்த்தகம், முதலீடு குறித்த 3-வது கூட்டுப் பணிக்குழுக் கூட்டம் கம்போடியாவில் நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 24 AUG 2026 5:13PM by PIB Chennai

இந்தியா – கம்போடியா இடையே வர்த்தகம், முதலீடு குறித்த 3-வது கூட்டுப் பணிக்குழுக் கூட்டம் 2026 ஆகஸ்ட் 24 அன்று கம்போடியாவின் புனோம் பென்னில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு  மத்திய வர்த்தகத்துறை இணைச் செயலாளர் திரு அமித் வர்மா, கம்போடியாவின் சர்வதேச வர்த்தகப் பிரிவு தலைமை இயக்குநர் திரு லாங் கெம்விசெட் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். அப்போது இருதரப்பு வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை அவர்கள் சுட்டிக் காட்டினார்கள்.

முந்தைய நிதியாண்டில் 299 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த வர்த்தகம், 2025 – 26-ம் நிதியாண்டில் 36 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்து, 406.78 மில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது. அத்துடன், 2026 ஏப்ரல் – ஜூன் இடையேயான காலாண்டில், ஆண்டுக்காண்டு அடிப்படையில் 63.25 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளது.

ஆசிய பிராந்தியத்தில் தற்போது இந்தியாவின் 8-வது மிகப்பெரிய வர்த்தக நட்பு நாடாக கம்போடியா உள்ளது. இப்பிராந்தியத்தில் இந்தியாவின் மொத்த வர்த்தகத்தில் கம்போடியாவின் பங்களிப்பு 0.31 சதவீதமாக உள்ளது.

பாரம்பரிய மருத்துவம், மின்னணு நிர்வாக முறைகள், இந்திய மருந்து தர நிலைகளை அங்கீகரித்தல், முக்கிய வர்த்தகக் கண்காட்சிகள், வர்த்தகப் பிரதிநிதிகள் குழு குறித்த தகவல்களைப் பரிமாறிக் கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் வர்த்தகத்தை விரிவுபடுத்துவது, வலுப்படுத்துவது குறித்துக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2302766&reg=3&lang=1

****

SS/IR/LDN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2302893) வருகையாளர் எண்ணிக்கை : 48
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Gujarati , Malayalam