நிதி அமைச்சகம்
உத்தரப் பிரதேசத்தில் மத்தியப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் நடத்திய சோதனையில் 18.6 கிலோ கிராம் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது
இடுகை இடப்பட்ட நாள்:
24 AUG 2026 10:03AM by PIB Chennai
போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான முக்கிய நடவடிக்கையாக, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மாநிலங்களைச் சேர்ந்த மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் ‘ஆபரேஷன் ப்ளாக் ஹாக்’ நடவடிக்கை மூலம் லக்னோ (உத்தரப் பிரதேசம்) அருகே மேற்கொண்ட சோதனைகளில் 18.64 கிலோ கிராம் போதைப் பொருள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இந்தப் போதைப் பொருள் வடகிழக்கு மாநிலங்களிலிருந்து உத்தரப் பிரதேசத்திற்கு கடத்தப்பட்டது தெரிய வந்தது.
2026, ஆகஸ்ட் 20-ம் தேதி இரவில் சுல்தான்பூர்-லக்னோ நெடுஞ்சாலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 16.46 கிலோ கிராம் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆகஸ்ட் 21-ம் தேதியன்று, சிலிகுரி-லக்னோ வழித்தடத்தில் கனரக வாகனத்தைச் சோதனையிட்டபோது 2.16 கிலோ கிராம் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2302577®=3&lang=1
***
SS/IR/SU
(வெளியீட்டு அடையாள எண்: 2302678)
வருகையாளர் எண்ணிக்கை : 72
இந்த வெளியீட்டை படிக்க:
Bengali
,
Assamese
,
Urdu
,
English
,
Gujarati
,
Marathi
,
हिन्दी
,
Bengali-TR
,
Punjabi
,
Telugu
,
Malayalam