உத்தரப் பிரதேசத்தின் சித்திரகூட், பண்டா மாவட்டங்களில் உள்ள ஆறு வளாகங்களில் இயங்கி வந்த பான் மசாலா, நறுமண ஜர்தா, குட்கா ஆகியவற்றை சட்டவிரோதமாக ரகசியமாக உற்பத்தி செய்யும் மையங்களை, ஜிஎஸ்டி புலனாய்வு தலைமை இயக்குநரகமான டிஜிஜிஐ-ன் லக்னோ மண்டலப் பிரிவு கண்டறிந்து அவற்றை முடக்கியுள்ளது. இந்தப் பிரிவுக்குக் கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில், அதிகாரிகள் 18.08.2026 அன்று நள்ளிரவு வாக்கில் இந்த வளாகங்களில் ஒருங்கிணைந்த சோதனைகளை மேற்கொண்டனர்.
இந்த சோதனைகளில் 15,50,922 பைகள் உற்பத்தி செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன்மூலம் இதுவரை சுமார் ரூ.185 கோடி மதிப்பிலான ஜிஎஸ்டி, ஹெச்எஸ்என்எஸ் செஸ், மத்திய கலால் வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்படாத வளாகங்களில் அறிவிக்கப்படாத இயந்திரங்களைப் பயன்படுத்தி இந்தச் செயல்பாடு நடத்தப்பட்டதாகவும், தயாரிக்கப்பட்ட பொருட்கள் உரிய ஜிஎஸ்டி, எச்எஸ்என்எஸ் செஸ், மத்திய கலால் வரி ஆகியவை செலுத்தப்படாமல் இரகசியமாக விற்கப்பட்டதாகவும் ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதையடுத்து அந்த உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு, லக்னோவின் சிறப்புத் தலைமை நீதித்துறை நடுவர் (சுங்கம்) முன் ஆஜர்படுத்தப்பட்டார். நீநிபதி, அவரை நீதிமன்றக் காவலில் வைத்தார்.
மேலும் விவரங்களுக்கு ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2301875®=3&lang=1
----
SS/PLM/SH