வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
திருத்தியமைக்கப்பட்ட நடைமுறைகளின் கீழ் ரூ.4,895.65 கோடி மதிப்பிலான 29 அந்நிய நேரடி முதலீடுகள் பதிவாகியுள்ளன
प्रविष्टि तिथि:
21 AUG 2026 4:59PM by PIB Chennai
திருத்தியமைக்கப்பட்ட நடைமுறைகளின் கீழ் இதுவரை மொத்தம் 29 அந்நிய நேரடி முதலீடுகள் பதிவாகியுள்ளன. இதன் மதிப்பு ரூ.4,895.65 கோடியாகும். இந்த முதலீடுகள் தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொடர்பு, உற்பத்தி, மருந்து தொழில், தரவு மையங்கள், போக்குவரத்துச் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கியுள்ளன.
மொரிஷியஸ், அமெரிக்கா, கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், லக்சம்பர்க், கேமன் தீவுகள் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள், நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. எல்லையை ஒட்டி அமைந்துள்ள நாடுளின் உரிமைத் தொடர்பான நிகழ்வுகளில் முன் அனுமதி தேவை என்ற நிபந்தனையை நீக்குவதன் மூலம் அந்நிய நேரடி முதலீடுகள் அதிகரிக்க வழிவகுக்கிறது. இத்தகைய சீர்திருத்த நடவடிக்கைள் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை உறுதி செய்வதுடன் இந்தியாவில் வர்த்தகம் செய்வதற்கான சூழலை எளிதாக்குகிறது.
பத்து சதவீதம் வரையிலான கட்டுப்பாடற்ற நில எல்லையைக் கொண்டுள்ள நாடுகளின் உரிமையைப் பெற்றுள்ள முதலீட்டாளர்கள் துறை சார்ந்த உச்சவரம்பு, அனுமதிக்கப்பட்ட வழிமுறைகள், இதர நிபந்தனைகளுக்குட்பட்டு முதலீடுகளை மேற்கொள்ள வகைசெய்யப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2301992®=3&lang=1
****
SS/SV/GS/SH
(रिलीज़ आईडी: 2302129)
आगंतुक पटल : 10