குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
குறு, சிறு, நடுத்தர தொழில்துறையின் பொருட்களை ஏற்றுமதி செய்வது குறித்தக் கருத்தரங்கம் சென்னை ஐஐடி-ல் நடைபெற்றது
இடுகை இடப்பட்ட நாள்:
20 AUG 2026 10:54AM by PIB Chennai
குறு, சிறு, நடுத்தர தொழில்துறையின் உற்பத்திப் பொருட்களை உள்ளூரிலிருந்து உலக நாடுகளுக்கு டிஜிட்டல் வர்த்தம் மூலம் ஏற்றுமதி செய்வது குறித்தத் தேசிய அளவிலான கருத்தரங்கம் சென்னை ஐஐடி-ல் ஆகஸ்ட் 18 அன்று நடைபெற்றது.
மத்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறை அமைச்சகம் (எம்எஸ்எம்இ) ஏற்பாடு செய்திருந்த இக்கருத்தரங்கில் குறு, சிறு, நடுத்தர தொழில்துறையினர், தொழில்முனைவோர், மாணவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், நிதி நிறுவனப் பிரதிநிதிகள், ஏற்றுமதியாளர்கள், டிஜிட்டல் வர்த்தக நிபுணர்கள் ஆகியோர் கலந்து கொண்டு குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறையின் தயாரிப்புகளைத் தேசிய, சர்வதேச சந்தைகளுக்குக் கொண்டு செல்வதற்கான நடைமுறை வழிமுறைகள் குறித்து விவாதித்தனர்.
இக்கருத்தரங்கில் தொடக்க அமர்வில் சிறப்புரையாற்றிய தமிழ்நாட்டின் எம்எஸ்எம்இ துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு பிரவீன் யாதவ், டிஜிட்டல் வர்த்தகம் குறு, சிறு, நடுத்தர தொழில்துறையை உலகளாவியச் சந்தைகளை அணுகுவதற்கு வழிவகை செய்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும் இதற்கு உகந்த சூழலை உருவாக்க மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே வலிமையான ஒருங்கிணைப்புத் தேவை என்று அழைப்பு விடுத்த அவர் இதன் மூலம் குறு, சிறு, நடுத்தர தொழில்துறையின் உலகளாவிய போட்டித் தன்மையை விரைவாக எதிர்கொள்ள முடியும் என்று கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2301417®=3&lang=1
***
SS/IR/SM/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2301561)
வருகையாளர் எண்ணிக்கை : 49